Pages

Wednesday, December 2, 2015

பிரதான முக்கியத் துறைகளில் 24 மணிநேரம் பணியாற்ற உத்தரவு


பலத்த மழை காரணமாக, பிரதான முக்கியத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

வருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலை, உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். மேலும், மேலே குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்தோர் எந்தக் காரணம் கொண்டும் விடுமுறையில் செல்லக் கூடாது என உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

No comments:

Post a Comment