சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
(International Day for the Abolition of Slavery)
அடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. ஆகவே 2002ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஒரு தீர்மானத்தின்மூலம் டிசம்பர் – 2ஐ சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என ஐ.நா. கூறுகிறது.
உலக கணினி கல்வி தினம்
(World Computer Literacy Day)
கணினிப் பொறியானது மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாகச் செய்து முடிக்கிறது. கணினி தற்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடிகிறது. ஆகவே அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment