வெள்ளத்தில் மூழ்கிய ஜெயா, புதிய தலைமுறை டிவி அலுவலகங்கள்... "லைவ் ஒளிபரப்பு நிறுத்தம்
சென்னை: வரலாறு காணாத கனமழையால் அடையாறு ஆற்றில் செல்லும் வெள்ளநீர் ஜெயா, புதிய
தலைமுறை, வேந்தர் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் புகுந்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. இதன்காரணமாக ஜெயா குழும சேனல்களின் ஒளிபரப்பு தற்காலிமாக
நிறுத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை சேனலின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
வேந்தர் டிவி அலுவலகத்திற்குள்ளும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வழக்கமான ஒளிபரப்பு
நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்க்ரோலிங் போகிறது. அதேநேரத்தில் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன புதிய
தலைமுறை சேனலின் நேரலை நிறுத்தப்பட்டு ஆவணப்படம் ஒளிபரப்பானது அதுவும் சற்று நேரத்தில்
நிறுத்தப்பட்டது.
கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால், சென்னை நகர் சின்னாபின்னமாகிவிட்டது. ஹாலிவுட்
திரைப்படங்களை மிஞ்சும் அளவில் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளதாலும், இன்னும் பல லட்சம் மக்கள்
கரையோரங்களில் உள்ள வீடுகளில் சிக்கி மீட்கும்படி எழுப்பும் கூக்குரலும் நெஞ்சை
உருக்குவதாக உள்ளன.
சென்னையில் கடந்த 3 நாட்களாக விடாமல் கொட்டிய மழையால் ஏற்கனவே பெய்த கன மழையால்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் தனது
முழு அளவையும் எட்டியிருந்தது.
ஏரிகளில் இருந்து பல ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளின் ஓரமாக
வசிப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாநில அரசும், சென்னை மாநகராட்சியும் செய்யத்
தொடங்கியது.
செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து காலையில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக
அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று 8 ஆயிரம் கன அடியும், பின் 20 ஆயிரம் கன அடியும்
திறந்து விடப்பட்டது. மாலையில் 30 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது.
80000 கனஅடி நீர் வெள்ளம்
80000 கனஅடி நீர் வெள்ளம்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், நகரில்
பெய்த மழையின் காரணமாக அடையாறு ஆற்றில் மட்டும் 80 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது.
மூழ்கிய பாலங்கள்
மூழ்கிய பாலங்கள்
அடையாறு ஆற்றில் ஈக்காடுதாங்கல் பாலம், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அடையாறு திருவிக
பாலம் ஆகிய பாலங்களை தாண்டி வெள்ளம் வந்தது. பாலங்கள் தொடங்கும் இரு பகுதியிலும் பல
அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்தது.
மூழ்கிய குடியிருப்புகள்
மூழ்கிய குடியிருப்புகள்
உடனடியாக இந்த பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இது கரையை விட பல
மடங்கு உயரமாக தண்ணீர் வந்ததால், அருகில் உள்ள குடிசைகள், வீடுகள் மட்டுமல்லாது
அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள், வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.
தீவுகளாக மாறிய நகரம்
தீவுகளாக மாறிய நகரம்
சென்னை சைதாப்பேட்டை, ஈக்காடுதாங்கல், அடையாறு பகுதியில் இருந்து அடையாறு ஆற்றை
கடந்து, அடையாறு, பெசன்ட்நகர், கிண்டி, பகுதிளுக்கு மக்கள் செல்ல முடியவில்லை. தென்
சென்னையில் இருந்து இந்த பாலங்களை தாண்டி மக்கள் நகருக்குள் வர முடியவில்லை. இதனால்
சென்னை நகரே பல தீவுகளாக மாறின.
சுரங்க பாதைக்குள் வெள்ளம்
சுரங்க பாதைக்குள் வெள்ளம்
அடையாற்றில் ஓடும் வெள்ளநீரினால் சைதாப்பேட்டை சுரங்க பாதைக்குள் வெள்ளம்
சுரங்க பாதைக்குள் வெள்ளம்
அடையாற்றில் ஓடும் வெள்ளநீரினால் சைதாப்பேட்டை சுரங்கப்பாதைக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளநீர் கட்டுக்கடங்காமல் போனதால் அருகில் உள்ள கட்டிடங்களையும் மூழ்கடித்துச் சென்றது.
ஜெயா டிவியில் வெள்ளம்
ஜெயா டிவியில் வெள்ளம்
ஈக்காட்டுந்தாங்கலில் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஜெயா டிவி அலுவலகத்திற்குள் வெள்ளநீர்
புகுந்துள்ளதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஜெயா குழும சேனல்களின் ஒளிபரப்பு
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வேந்தர் டிவி நிறுத்தம்
வேந்தர் டிவி நிறுத்தம்
இதேபோல் புதிய தலைமுறை குழும அலுவலகமும் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ளது.
அக்குழுமத்துக்கு சொந்தமான வேந்தர் டிவியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வழக்கமான நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஓடுகிறது. நேயர்களுக்கு வருத்தம்
தெரிவித்துள்ளது வேந்தர் டிவி.
புதியதலைமுறை சிக்கல்
புதியதலைமுறை சிக்கல்
இதேபோல் புதிய தலைமுறை டிவி சேனல் அலுவலகத்தில் வெள்ளம் முழங்கால் அளவிற்கு
தேங்கியுள்ளது. எனினும் செய்தி ஒளிபரப்பு பிற்பகல் வரை நடைபெற்றது. பின்னர் நேரலை
நிறுத்தப்பட்டு ஆவணப்படமும் தடங்கல்களுடன் ஒளிபரப்பாகிறது.
புரட்டி போட்ட மழை
புரட்டி போட்ட மழை
வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை நகரையே சின்னாபின்னமாக்கிவிட்டது. இதில் பல தொலைக்காட்சி சேனல்களும் தப்பவில்லை. இந்து நாளிதழ் தனது பதிப்பையே முதல் முறையாக
நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment