அறிவியல் விருது தேதி நீட்டிப்பு
அறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 4ம் தேதி வரை, அறிவியல் நகரத்தில் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக, காலக்கெடு, 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம், விதி மற்றும் விவரம், அறிவியல் நகரம் இணையதளத்தில் www.sciencecitychennai.in வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment