அப்துல்கலாம் விஷன் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் குமார்.
ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:–‘வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால், தமிழகத்தில் கனமழை பொழிந்து, பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இன்றும் மின்சார இணைப்பு இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், வருகிற 15–ந்தேதி முதல், என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘செமஸ்டர்’ தேர்வுகள் நடத்தப்படும் என்று கடந்த 10–ந்தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு டிசம்பர் 15–ந்தேதி தொடங்குவதாக இருந்தது. இந்த தேர்வு டிசம்பர் 28–ந்தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழம் அறிவித்துள்ளது’ என்று கூறினார்.இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகில ‘சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டும் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.ஆனால் தமிழகம் முழுவதும் தேர்வை தள்ளி வைக்க அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment