Friday, October 7, 2016
மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் !
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை முதல்வர் வி.நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கடந்த 4-ம் தேதி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தீபாவளி போனஸ் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அதாவது பிரிவு சி மற்றும் டி மறறும் பிரிவு பி யைச் சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு போனஸாக அவர்களுக்கு ரூ.6908 வழங்கப்படும்.
மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1184 போனஸ் வழங்கப்படும். ஓராண்டு பணிநிறைவு செய்த மற்றும் 3 ஆண்டுகளுக்குள் பணி செய்த தற்காலிக பகுதி நேர மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.1000 தரப்படும்.
மேலும் உற்பத்தி சார்ந்த போனஸாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'
சென்னை: மவுலானா ஆசாத் நினைவு கல்வி உதவித்தொகைக்கு, 10ம் வகுப்பு முடித்த, சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
மவுலானா ஆசாத் நினைவு உதவித்தொகை என்ற இத்திட்டத்தில், 10ம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 1ல் துவங்கியது; நவ., 30 வரை பதியலாம். மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின், http://www.maef.nic.in இணையதளத்தில், நேரடியாக விண்ணப்பித்து, அதன் நகலை, கல்வி அறக்கட்டளை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முறை ரத்து செய்ய சி.பி.எஸ்.இ., திட்டம்
பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை ரத்து செய்ய, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். சி.பி.எஸ்.இ., நடத்தும் பொதுத் தேர்வில், 2014ல் விடைத்தாள் மறுமதிப்பீடு திட்டம் அமலானது.
வழக்கமான மதிப்பீட்டில் பிரச்னை இருப்பதாக தெரிய வந்தால், மறு மதிப்பீட்டுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கடந்த, இரு கல்வி ஆண்டு களில் மறுமதிப்பீட்டுக்கு, இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே விண்ணப்பித்தனர். அத்துடன், மறுமதிப்பீட்டில், பலரது மதிப்பெண்கள் மாறவில்லை. சொற்ப அளவிலான மாணவர்களுக்காக, பல ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு, கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, மூன்று வகை மேற்பார்வையுடன், விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுவதால், பெரிய அளவில் புகார்கள் எழவில்லை.
எனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டை, நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்யவும், தற்போதுள்ள திருத்த முறையை தொடரவும், சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்; இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தொழில்நுட்ப தேர்வு முடிவு : கலை ஆசிரியர்கள் சந்தேகம்
'ஓவியம், கலை படிப்புகளுக்கான, தேர்வின் விடைத்தாள் நகல்களை வழங்க வேண்டும்' என, கலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓவியம், கலை, தையல், கைவினை உள்ளிட்ட, பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கு, அரசு தேர்வுத்துறை சார்பில், 2015 நவம்பரில் தேர்வு நடந்தது.
இதன் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, தேர்வு மையங்களில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன; இதில், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தவர், அதிக தேர்ச்சி பெற்றுஉள்ளனர். தமிழகத்தை சேர்ந்த, 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என, தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு, விடைத்தாள் சரியாக திருத்தம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், விடைத்தாள் நகல்களை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், ''விடைத்தாள் நகல்கள் வழங்கவும், மறுமதிப்பீடு செய்யவும், அரசு தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வு உண்டா? : அறிவிப்பு இல்லாததால் குழப்பம்
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, அடுத்த கல்வி ஆண்டில், 'நீட்' என்ற, தேசிய நுழைவுத்தேர்வு உண்டா என்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்த வழக்கில், அனைத்து மாநில மாணவர்களும்,
வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்
தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன.
Wednesday, October 5, 2016
3 பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு பிரிட்டனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் கொள்கை தொடர்பான புதிய கண்டுபிடிப்பை கண்டறிந்ததற்காக அவர்கள் இந்த பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். இயற்பியல், பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசை, சுவீடன் நாட்டின் நோபல் தேர்வுக்குழு அறிவித்து வருகிறது. நேற்று முன்தினம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படுபடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இட மாறுதல் உத்தரவு பெற்றும் சிக்கல் : போராட தயாராகும் ஆசிரியர்கள்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த ஆண்டுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது. தொடக்கப் பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கவுன்சிலிங் நடந்தது; இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இட மாறுதல் பெற்றனர். அவர்களில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களில் பலர், இன்னும் தங்களின் பழைய இடங்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
8ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு தபாலில் சான்றிதழ்
எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு விரைவு அஞ்சலில் சான்றுகளை அனுப்பியுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எட்டாம் வகுப்பு தேர்வை, தனித் தேர்வர்களாக எழுத விரும்பியோருக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்ற மாணவ- மாணவியருக்கு உரிய சான்றுகள் நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் 7ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படுகிறது. சான்றுகள் கிடைக்காதவர்கள், அந்தந்த அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
புதிய ரேஷன் கார்டு பெற இணையம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?..
ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில்
இருந்தும்நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது.
இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது உணவுத்துறை.இதற்காகத் தொடங்கப்பட்டுள்ள ‘tnpds.com’ என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக் செய்ய வேண்டும்.பிறகு கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக்கு 6 வாரம் கெடு
சிறப்பு ஆசிரியர்களுக்கு, உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, ஆறு வாரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில், கலை, ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், 15 ஆயிரம் பேர் சிறப்பு ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். இவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தால், பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியிடங்கள் இல்லாததால், பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தால், உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய 3 கட்ட பதவி உயர்வு; 7வது சம்பள கமிஷன் சிபாரிசுக்கு ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசின் ஒரு சில அம்சங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளித்து அமலுக்கு வந்துள்ளது. மற்ற அம்சங்களை அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இயற்கை பாதுகாப்பு விருது விண்ணப்பிக்க அழைப்பு!!
பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தனி நபர்களுக்கு, இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் விருது வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் சுகாதாரம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பேணுதல், வன உயிரினங்கள் பாதுகாத்தல், மாணவர்களுக்கான இயற்கை முகாம்,
மரம் வளர்ப்பு உள்ளிட்ட பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க இயற்கை பாதுகாப்பு சங்கம் விருது வழங்குகிறது.
போட்டியில், துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள், கல்லுாரிகள் சார்பிலும், தனி நபர்களும் கலந்து கொள்ளலாம். கோவை, திருப்பூர் மாவட்ட பழங்குடியின மாணவர் பள்ளிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் சுகாதாரம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பேணுதல், வன உயிரினங்கள் பாதுகாத்தல், மாணவர்களுக்கான இயற்கை முகாம்,
மரம் வளர்ப்பு உள்ளிட்ட பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க இயற்கை பாதுகாப்பு சங்கம் விருது வழங்குகிறது.
போட்டியில், துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள், கல்லுாரிகள் சார்பிலும், தனி நபர்களும் கலந்து கொள்ளலாம். கோவை, திருப்பூர் மாவட்ட பழங்குடியின மாணவர் பள்ளிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது.
இன்று முதல் 374 இடங்களில் மீண்டும் 'ஆதார்' பணி
தமிழகத்தில், இன்று முதல், 374 மையங்களில், 'ஆதார் அட்டை' வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகின்றன.
தமிழகத்தில், செப்., 30 வரை, ஆதார் அட்டை வழங்கும் பணியை, மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. அக்., 1 முதல், அப்பொறுப்பு, தமிழக
அரசின், தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள, அரசு கேபிள், 'டிவி' மற்றும் மின்னணு கழகமான, 'எல்காட்' வசம் வந்துள்ளது. சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்ததால், சில நாட்களாக, ஆதார் பணிகள் பாதிக்கப்பட்டன. இன்று முதல், 374 மையங்களிலும், பணிகள் முழுவீச்சில் துவங்குகின்றன.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது: தொழில்நுட்ப பிரச்னை கள் சரி செய்யப்பட்டு, நேற்று மதியம் முதல், பல மையங்களில், ஆதார் அட்டைக்கு புகைப்படம் மற்றும் கைரேகை பதியும் பணிகள் துவங்கின. இன்று முதல், தலைமை செயலகம், ரிப்பன் மாளிகை, எழிலகம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகாஅலுவலகங்கள் உட்பட, சென்னையில், 63 இடங்களில், இப்பணிகள் நடைபெறும்.
மாநிலம் முழுவதும், 275 தாலுகா அலுவலகங்கள், 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உட்பட, மொத்தம், 374 இடங்களில், மக்கள், ஆதார் அட்டைக்கு மனு செய்யலாம். அடுத்த வாரத்தில் இருந்து, தமிழகத்தில் உள்ள, இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் என, 600 மையங்களும், முழுவீச்சில் செயல்படும்; மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இனி மூன்று படிவம்
● ஆதார் அட்டை வழங்க இனி, மூன்று படிவங்கள் தரப்படும்; அவை தமிழில் இருக்கும்
● ரேஷன் கார்டு உள்ளிட்ட, ஏதேனும் ஒரு இருப்பிட சான்று; தனி நபர் சான்றுக்காக, வங்கி புத்தகம், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, அஞ்சலகம் வழங்கும் முகவரி சான்றில், ஏதேனும் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும்
● தனி நபர் சான்று ஆவணங்கள் இல்லாதோர், கிராம நிர்வாக அலுவலரிடம், இருப்பிடச் சான்று பெற்று வரலாம்; இதுவரை இருந்த, 'டோக்கன்' முறை இனி இருக்காது.
Saturday, May 7, 2016
தமிழ்நாட்டில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம்: மருத்துவ கவுன்சில்
தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாநில அரசுகள் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்றும் தனியார் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்ற விசாரணையின் போது விளக்கம் அளித்தது.
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்கள் ஆய்வு போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம்
கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவு
கோடை விடுமுறை முடிவதற்குள் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என போக்குவரத்துதுறைக்கு சமீபத்தில் நாக்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் கோடை விடுமுறைக்குள் ஆய்வு செய்ய வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் மும்பையில் உள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு கோடை விடுமுறை முடிவதற்குள் பள்ளி வாகனங்களை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
கோடைக்குள் ஆய்வு
இந்த ஆய்வின் போது பள்ளிவாகனங்களின் எந்திர தன்மை, வாகன பெயிண்டின் நிறம், இருக்கைகள், அவசரகால வெளியேறும் பகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சரியாக உள்ளதா என போக்குவரத்து அதிகாரிகளால் சோதனை செய்யப்படும். இந்த ஆய்விற்கு பிறகு முறையாக பராமரிக்கப்பட்டு வரும் பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்படும்.
இதுகுறித்து வட்டாரப்போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “ கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய நாக்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதிகாரிகளின் ஆய்விற்கு கொண்டு வரப்படாத பள்ளி வாகனங்களுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்படாது ” என்றார்..
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு... கட்டாயம்
மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் பரிசீலனை
தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.
அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.
அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்று ஆவணங்கள் அறிவிப்பு
சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.சட்டசபை தேர்தலில், ஓட்டு போட செல்லும் வாக்காளர்கள், தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.
அதை அளிக்க இயலாதவர்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க, மாற்று புகைப்பட அடையாள ஆவணமாக, 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம். அவற்றின் விவரம்:
தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகள் தேவை: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் எம்.கலைச்செல்வி தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்' என கூறியிருந்தார்.
தபால் ஓட்டு செலவு குறைக்க தேர்தல் கமிஷன் புது முயற்சி !
தபால் செலவை குறைக்க, அனைத்து தொகுதிகளிலும் தபால் ஓட்டுப்பதிவு மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலர்கள் தேர்தலில் தபால் மூலமாக, தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்கின்றனர்.
ஓட்டை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தொகுதிக்கு அனுப்புவது வழக்கமாக உள்ளது. தபால் ஓட்டுக்களை, அஞ்சல்
துறை மூலமாக அனுப்புவதால் அதிக செலவு ஏற்படுகிறது. செலவை கட்டுப்படுத்த, தபால் ஓட்டுப்பதிவுக்கு, சேவை மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தபால் ஓட்டு நடவடிக்கையால், தொகுதிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. செலவை குறைக்க, ஒவ்வொரு தொகுதியிலும் தபால் ஓட்டுப்பதிவு சேவை மையம் அமைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
தபால் ஓட்டுகள் நிரப்பும் வழிமுறைகள் !!!
முக்கியம்! முக்கியம்!
தபால் ஓட்டு தாங்கள் நாளை(7.5.16) கலந்து கொள்ளும் பயிற்சி வகுப்பில் கொடுக்க உள்ளார்கள்.
அப்போது செய்ய வேண்டியவை.,
தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க ....
முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் ✅ டிக் அடிக்க வேண்டும் .
பள்ளிகளில் யோகா கட்டாயம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுருத்தியுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை கட்டாயம் ஆக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்தகவலை மத்திய ‘ஆயுஷ்’ துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் 29.04.2016 முதல் வரிசை எண் மாறியுள்ளது, பாகம் எண், வரிசை எண் சரி பார்த்துக் கொள்ளவும்
வாக்காளர் பட்டியலில் 29.04.2016 முதல் வரிசை எண் மாறியுள்ளது, பாகம் எண், வரிசை எண் சரி பார்த்துக் கொள்ளவும்
Click here - வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக்கொள்ள
Friday, May 6, 2016
Annamalai university may 2016 hall ticket available
Annamalai university may 2016 hall ticket available
Click Here
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.பி.ஏ., - சுற்றுலா: இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு, சுற்றுலா மற்றும் சரக்கு மேலாண்மை பாடப்பிரிவு.
10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவு தேதி வெளியீடு!
10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு
முடிவு தேதி வெளியீடு!
சென்னை: 10 மற்றும் 12ஆம்
வகுப்புகளுக்கான தேர்வு
முடிவுகள் வெளியாகும் தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை
செயலாளர் சபிதா விடுத்துள்ள
அறிவிப்பில், "12ஆம் வகுப்பு தேர்வு
முடிவு மே மாதம் 17ஆம் தேதி
வெளியிடப்படும். அன்று காலை 10
மணிக்கு தேர்வு முடிவுகளை
அறிந்து கொள்ளலாம்.
அதேபோல், 10ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகள் மே மாதம் 25ஆம் தேதி
காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
dge.tn.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in,
dge3.tin.nic.in ஆகிய இணையதளங்களில்
முடிவுகள் வெளியாகும். அதில்,
பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு
செய்து தேர்வு முடிவுகளை
தெரிந்து கொள்ளலாம்'' எனக்
கூறப்பட்டுள்ளது.
Thursday, May 5, 2016
10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: மே 6-ல் வெளியாகிறது...!!
10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே6-ம் தேதி வெளியாகவுள்ளன.இந்த முடிவுகளை சிஐஎஸ்இசி கல்வி வாரியம் வெளியிடவுள்ளது.இதுகுறித்து சிஐஎஸ்இசி கல்வி வாரியத்தின் தலைமைச் செயலல் அதிகாரியும்,செயலருமான கெர்ரி அராத்தூன் கூறியதாவது:
கருணை மதிப்பெண்ணுக்கு எதிராக வழக்கு: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 4.3.2016 முதல் 1.4.2016 வரை நடைபெற்றது. வேதியியல் தேர்வு மார்ச் 14-ல் நடைபெற்றது.
செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது: மத்திய மந்திரி தகவல்
செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது என்று ஆய்வில் தெரிய வந்து இருப்பதாக மத்திய மந்திரி கூறினார்.
புதுடெல்லி :
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது, செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் தீங்கு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத், பதில் அளித்து கூறியதாவது:-
அரசு இசைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை
மதுரை பசுமலை அரசு இசைக்கல்லுாரியில் 2016-17ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளதாவது: இக்கல்லுாரியில் 3 ஆண்டு பட்டய வகுப்புகளான குரலிசை, வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதஸ்வரம், நாட்டுப்புறக்கலை வகுப்புகள் நடக்கின்றன.
13-18 வயதுள்ள, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இசைக்கலைமணி பட்டயம் தேர்ச்சியுடன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இளங்கலை இசையில் (பி.ஏ., மியூசிக்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு கால இசை ஆசிரியர் பட்டயப்பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இதில் 15-25 வயதிற்கு உட்பட்டோர் சேரலாம்.
Wednesday, May 4, 2016
மே 5 முதல் 'பூத் சிலிப்' வினியோகம்
மே 5 முதல் 'பூத் சிலிப்' வினியோகம்
''வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வரும், 5ம் தேதி முதல், வீடு வீடாகச் சென்று வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய, பூத் சிலிப் அச்சிடும் பணி முடிந்துள்ளது. அனைத்து வாக்காளர்களுக்கும், மே 5ம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள்,
வீடு வீடாகச் சென்று வழங்குவர்.
மருத்துவ நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தல் !
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் வடிவேல், செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:
மாநில கல்வி வாரிய மாணவன் மருத்துவ நுழைவு தேர்வில் பங்கேற்க முடியவில்லை. மத்திய அரசின்
பாடத்திட்டத்தில் படிப்பவரே நுழைவு தேர்வை எழுதுகின்றனர்.
இதற்காக அந்த பாடத்திட்டத்தை தமிழில் மாநில அரசுகள் பாடத்திட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் மற்றும் இதர மொழிகளிலும் நீட் தேர்வு நடத்த வேண்டும். இடஒதுக்கீடுகள் பாதிக்கப்படாத அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்தி 2 ஆண்டுகளுக்குப்பின் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும், என்றனர்.
பள்ளிக்கல்வித்துறை பாடப்புத்தகங்கள் பதிவிறக்கம் செய்யலாம் 1-12 ம் வகுப்பு வரை!
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் இந்த இணையதளத்தில் பெறலாம் 1 to 12 Std, DTE I & II year
click Here
Tuesday, May 3, 2016
மே தின வரலாறு - ஓர் பார்வை
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே 1 உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
மே தின வரலாறு
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
TAMIL UNIVERSITY TANJORE ADMISSION NOTIFICATION B.Ed 2016 Distance Education
TAMIL UNIVERSITY
TANJORE
ADMISSION NOTIFICATION
B.Ed 2016 Distance Education
*Application issue from 24.04.2016
*Cost of Application Rs.600/-
புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை:பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை.
தேவையற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
Saturday, April 30, 2016
கோவா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விருப்பமா...!!
கோவா பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், நூலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
தமிழக மாணவர்களுக்கு சிக்கல் !
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வு முறை ரத்து
செய்யப்பட்டு, 2007 முதல், பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.
திட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்:
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: மத்திய அரசு யோசனையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு இன்று மனு செய்திருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்துவது என்பது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவில் உரிய மாற்றம் தேவை எனக் கோரப்பட்டது.
Friday, April 29, 2016
மே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற மே 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மருத்துவ மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் அனுமதி
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதன் படி மே 1-ம் தேதி முதற்கட்ட நுழைவு தேர்வையும், ஜூலை 24-ம் தேதி 2-ம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த உத்தரவிட்டதோடு ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிவை வெளியிடவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு கல்வி மையங்கள் தனித்தனி யாக நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இதை தடுக்கும் நோக்கத்துடன் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் இணைந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்த முடிவு செய்தன.
விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அதிவேக சேவையின் மூலம் அசத்துகிறது பாஸ்போர்ட் துறை
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.
புதிதாக விண்ணப்பித்தவர்களையும் சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் ராஜேஷ் லக்கானி பேட்டி
புதிதாக விண்ணப்பித்தவர்களை சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–வேட்புமனு நிராகரிக்கப்படும்
வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் கூடுதலாக ஒரு உறுதி மொழி கடிதம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பில் தங்கியிருந்து அதற்கான வாடகை, டெலிபோன் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் ஆகியவை பாக்கி இல்லாமல் செலுத்தப்பட்டுள்ளது என்ற வாடகை நிலுவையில்லா சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.உதாரணத்துக்கு எம்.எல்.ஏ விடுதி அல்லது எம்.பி. விடுதிகளில் தங்கியிருந்து அதற்காக வாடகை செலுத்தாதவர்கள், அரசு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து அதற்கான வாடகையை செலுத்தாதவர்கள் நிலுவையில்லா சான்றிதழ் அளிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பில் தங்காதவர்களும் நான் கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பில் தங்கவில்லை என்ற சான்றிதழையும் அளிக்க வேண்டும். அந்த சான்றிதழை வேட்புமனு தாக்கலின்போது அளிக்க முடியாதவர்கள் கடைசி நாளான நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) அளிக்க வேண்டும். இல்லையென்றால் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும்.
வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்
வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–17 ஆயிரம் ஆசிரியர்கள்
பி.யூ.கல்லூரி கல்வி வாரிய நிர்வாகம் மற்றும் தேர்வாணைய நிர்வாகத்தை தனித்தனியாக பிரித்து அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து அறிக்கை வழங்குமாறு துறை உயர் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிஎப்புக்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதியமைச்சகம் திடீர் விளக்கம்
பிஎப்புக்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு 2015-16 நிதியாண்டுக்கான வட்டியாக 8.8 சதவீதம் அளிக்க வேண்டும் மத்திய அறக்கட்டளை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 8.7 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது.
பிஎப் நிறுவனம் கடந்த 2013-14 மற்றும் 2014-15 நிதியாண்டுகளுக்கான வட்டியாக 8.75 சதவீதம் வழங்கியது. இது 2012-13 நிதியாண்டில் 8.5 சதவீதமாகவும், 2011-12 நிதியாண்டில் 8.25 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு முன்பு கால் சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டது. அதோடு கடந்த பிப்ரவரி 16ம் தேதி 2015-16க்கான இடைக்கால பிஎப் வட்டி விகிதமாக 8.8 சதவீதமாக முடிவு செய்யப்பட்டது. இந்த இடைக்கால வட்டியை கூட தர மறுத்துள்ளது நிதியமைச்சகம். இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.
Thursday, April 28, 2016
மெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு...!!
மெட்ராஸ் ஐஐடி நடத்தும் ஹிமானிடீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ் நுழைவுத் தேர்வு (எச்எஸ்இஇ) முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுகள் கடந்த 17-ம் தேதி நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகள் மே 11-ம் தேதி வெளியாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் !
இன்னும், ஓராண்டு கழித்து வரவுள்ள பொதுத் தேர்வு காய்ச்சல், பள்ளிகளை ஆட்கொண்டுள்ளதால், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது?- ஓரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு
பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ல் ஆரம்பித்து ஏப்ரல்11-ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப் பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத் தில் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன. எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையும் நிலையில்தான் உள்ளது.
TNOU - UG,PG,B.Ed&B.Ed Timetable & B.Ed -2016 IV Counselling List
Tamilnadu Open University
▪UG,PG,B.Ed&B.Ed (SE) Timetable for Term End Examination June -2016 Published
Download in www.tnou.ac.in
▪B.Ed -2016 IV Counselling List (Tamil Medium) on 06.05.2016 @8.30AM
Avail in www.tnou.ac.in
Wednesday, April 27, 2016
முதுகலை பட்டதாரிகளுக்கு அரிசி ஆராய்ச்சி மையத்தில் பணி
கட்டாக்கில் செயல்பட்டு வரும் தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் (National Rice Research Institute) நிரப்பப்பட உள்ள SRF பணிக்கு தாவரவியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது.
அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும் கல்வித்துறை உத்தரவு.
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை10சதவீதம் அதிகரிக்க உத்தரவு. வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை10சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில்10சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும்நாளில் மாணவர்,ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில்வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள்,ஆங்கில வழிக் கல்வித்தரம்,வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்,கடந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம்,வளர்ச்சி குறித்து பெற்றோருக்கு எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை10சதவீதம் அதிகரிக்க உத்தரவு. வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை10சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில்10சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும்நாளில் மாணவர்,ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில்வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள்,ஆங்கில வழிக் கல்வித்தரம்,வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்,கடந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம்,வளர்ச்சி குறித்து பெற்றோருக்கு எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் அலுவலர் நியமனம் செய்ய கோரிக்கை
வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் மாநிலச் செயலர்கள் சோ. முருகேசன், மு. மணிமேகலை, மாவட்டச் செயலர் செ. பால்ராஜ், தலைவர் பி. ராஜ்குமார், பொருளாளர் சே. சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மு. கருணாகரனிடம் வழங்கினர்.
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!! 100% தபால் ஓட்டு பதிவிற்காக........
தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க ...
முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் ✅ டிக் அடிக்க வேண்டும் .
***** நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும
்*****டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.
***stable பண்ணக்கூடாது.*
Tuesday, April 26, 2016
ELECTION-2016:வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்:
பகுதி - I
1. வாக்குப் பதிவு இயந்திரம் 1/2/3 2. வாக்குப் பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவி - 1 (இவற்றை முறையாக மூடி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மெட்டல் சீல் வைக்க வேண்டும். முகவர்களும் முத்திரை வைக்கலாம்)
பகுதி - II
அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 2 லட்சம் மத்திய அரசுப் பணிகள்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
அடுத்த ஆண்டுக்குள் (2017) புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது.
ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு !
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை
படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர, ஜூன், 12ல், 'டான்செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடக்கிறது.
மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !
அரசு பள்ளிகளில்,கடந்தாண்டை விட, 10சதவீதம் வரை,மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என,தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து,தலைமை
ஆசிரியர்களுக்கு,பள்ளி கல்வித்துறை சார்பில்,அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை !
நாடு முழுவதிலுமுள்ள சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை
தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வியை மேம்படுத்த மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்பில் சேர மே 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மே 17–ந்தேதி
எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர மே மாதம் 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 17–ந்தேதி என்றும் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை மல்லிகா தெரிவித்தார்.மே 2–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
அவசர நேரத்தில் அழைக்க செல்போனில் புதிய வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயம்: மத்திய மந்திரி தகவல்
கடந்த 22-ந்தேதி இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை பற்றி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று விடுத்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
Monday, April 25, 2016
BLINDER's VOTE ,TENDER VOTE ! BLINDER's VOTE:
கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் ' 17C' யில் பதிவு செய்ய வேண்டும்.
பகுதி நேர பி.இ., பி.டெக்.: ஏப்ரல் 25 முதல் விண்ணப்பிக்கலாம் !
பகுதி நேர பொறியியல் (பி.இ., பி.டெக்.) படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 25 முதல் மே 9 வரை விண்ணப்பிக்கலாம். 2016-17ஆம் கல்வியாண்டில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர பாலிடெக்னிக் முடித்து, பணியில் இருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்கள்
படிப்புக்குப் பிறகு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும். கோவை, சேலம், திருநெல்வேலி, பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
CTET தேர்வு முடிவுகள் மே -8 ல் வெளியாகிறது !
சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியாகின்றன.
இது ஹரியாணா மாநிலத்துக்கான ஆசிரியர் தகுதித் தேர்வாகும். இந்தத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது ஹரியாணா நிலத்தில் நிர்வாகக்
கோளாறு காரணமாக இந்தத் தேர்வு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலத்துக்காக தனியாக மே 8-ம் தேதி இந்தத் தேர்வுகளை நடத்தவுள்ளது சிபிஎஸ்இ.
Saturday, April 23, 2016
பல்கலை தேர்வு தேதி நீட்டிப்பு !
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு மே 25ல் துவங்கும்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.பல்கலை கூடுதல் தேர்வாணையர் பி.டி.மனோகரன் தெரிவித்துள்ளதாவது:
மே இறுதிக்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு.
அனைத்து பள்ளி,கல்லூரி பஸ்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி,மே இறுதிக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும்என,ஆர்.டி.ஓ.,அலுவலகங்களுக்கு,தமிழக போக்குவரத்து துறைஉத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளில், 37ஆயிரத்து, 105வாகனங்கள் இயங்குகின்றன. பள்ளி,கல்லூரி வாகனங்களுக்கு,போக்குவரத்து துறை பல விதிமுறைகளை வகுத்துள்ளது.
மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் அப்பிளிகேசன் !!!
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி கணினித்துறை மாணவர்கள் மாதிரி ஆப்பரேஷன் மென்பொருள் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இறந்தவர்களின் உடல்களை உரிமையாளர்களின் அனுமதியுடன் பெற்று அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் உடற் பாகங்கள்
குறித்து பாடம் நடத்துவர். இறந்தவர் உடலை பயன்படுத்தி நேரடியாக அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கும் முறை இந்தியாவில் மட்டுமே அதிகளவில் உள்ளது.வெளிநாடுகளில், அதற்கென பிரத்யேக வீடியோக்கள், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மென்பொருள் மூலம் அறுவை சிகிச்சையை வீட்டில் இருந்தபடியே செய்து கற்றுக் கொள்கின்றனர்.
வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி
வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி
உங்களுடைய
தொகுதி பெயர்,
தொகுதி எண்,
வாக்கு சாவடி பாகம் எண்,
வாக்காளர் பட்டியல் வரிசை எண்
ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமா???
புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண்களால் குழப்பம் சீரமைக்கும் கருவூலத்துறை
புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை.
Friday, April 22, 2016
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது.
4 ஆயிரத்து 33 பேர் பிரதானத் தேர்வினை எழுதுவதர்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதானத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 1 தொகுதியில் 74 காலிப் பணியிடங்கள் இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8 இல் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 696 பேர் கலந்து கொண்டனர்.
மூன்றாம் பருவத்தேர்வு (இன்று முதல்) கால அட்டவணை.....
மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை.....
22.04.16 - தமிழ்
25.04.16 - ஆங்கிலம்
26.04.16 - கணக்கு
27.04.16 - அறிவியல்
28.04.16 - சமூக அறிவியல்
29.04.16 - உடற்கல்வி,
கலைக்கல்வி
30.04.2016 - ஆண்டு இறுதி
வேலை நாள்
தேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி
தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக அதிகாரி பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்k விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்கள் ’ஐ.ஜி.சி.எஸ்.இ’ படிப்பை தேர்வு செய்வது ஏன்?
மதுரை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காந்திகிராமம் அருகே லக்ஸர் வேர்ல்டு பள்ளி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரே சர்வதேச பள்ளியான இது, ஐந்தாவது ஆண்டை வெற்றிகரமாக துவக்கி உள்ளது. ஐ.ஜி.சி.எஸ்.இ கல்வி முறை உலக மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இதில் வாய்வழி கற்கும் திறன், விசாரணை திறமை, பிரச்னைகளை சரிசெய்தல்,
குழுவேலை, அறிவு, நினைவுத்திறன், முயற்சிகளை உருவாக்குவது போன்ற திறன்கள் ஊக்குவிக்கப்படுகிறது.
இது உலக அளவில் நிலையான நம்பகத்தன்மை பெற்ற கல்வி முறை. இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளால் பின்பற்றப்படுகிறது. ஐ.ஜி.சி.எஸ்.இ கல்வி, இந்திய பல்கலை கழகங்கள் கூட்டமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டது. பிரிட்டன் மற்றும் காமன்வெல்த் நாடுகளிலும் உலகளவில் 140க்கும் மேற்பட்ட நாடுகளின் பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் 7-ம் வகுப்புக்கு 9-ம் வகுப்பு கேள்வித்தாள் விநியோகம்: தேர்வுகள் ஒத்திவைப்பு
புதுச்சேரியில் 7-ம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வுக்கு 9-ம் வகுப்பு கேள்வித்தாளை விநியோகித்தனர். அதிகாரிகளின் குளறுபடியால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு நடந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 7-ம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வு நடந்தது. இதற்காக மாணவர்களுக்கு கேள்வித்தாள் விநியோகிக்கப்பட்டது. அதைப் பார்த்த மாணவர்கள், இது 7-ம் வகுப்பு கேள்வித்தாள் அல்ல என்று தேர்வு மேற்பார்வை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கேள்வித்தாளை பார்த்த ஆசிரியர்கள், உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். தொடர்ந்து ஆய்வு செய்ததில், 9-ம் வகுப்புக்கான கேள்விகள் அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது.
Wednesday, April 20, 2016
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு:
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு.
பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆன்லைன் பதிவு தொடர்பான விவரங்களை மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 686 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:ஹெட் கான்ஸ்டபிள்
வயது வரம்பு:05.05.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:இன்டர்மீடியட் (10 2) மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் குறிப்பிட்ட வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
மே 9 முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் மே 9-ம் தேதி முதல் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.விண்ணப்பங்களை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில்பெற்றுக்கொள்ளலாம். அல்லது tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 27ம் தேதி மாலை5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியல் வரும் ஜூன் 15-ல் வெளியிடப்படும். ஜூலை மாதம் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டைப் போலவே 2655 இடங்கள் காலியாக உள்ளன.
பி.எப். தொகையை எடுப்பதில் கட்டுப்பாடுகள் இல்லை: புதிய விதிமுறை அறிவிக்கையை ரத்து செய்தது மத்திய அரசு
பி.எப். தொகையை மொத்தமாக எடுப்பதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
தொழிலாளர்கள் தங்களின் பி.எப். கணக்கில் உள்ள தொகையில் இருந்து தங்களின் தேவைக்கு ஏற்ப வீடு கட்டுதல், மருத்துவ செலவு, திருமணம் தொடர்பான தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், ஒரு நிறுவனத்தின் வேலையில் இருந்து விலகியபின்னர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், அவர் தனது பி.எப். கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்பப் பெற முடியும்.
ஆசி-ரி-ய-ர்-க-ளுக்கு இயக்குனரகம் தடை
ராமநாதபுரம் : விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தடை விதித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 15ம் தேதி துவங்கி, ஏப்., 13ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ம் தேதி துவங்கியது.
"பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு கண்காணிக்கப்படுகிறது'
பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது என அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார்.
வீதி, வீதியாகக் கணக்கெடுப்பு: மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும், இலவச கட்டாய கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்.
Monday, April 18, 2016
டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
தமிழக அரசின்கீழ் செயல்படும் ‘எல்காட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
வயது வரம்பு:18 முதல் 30. வயது வரம்பு சலுகையும் உண்டு.
காற்றாலை கைகொடுத்தால் மட்டுமே மே மாதம் தப்பமுடியும் !!!
கடும் வெயில்காரணமாக தமிழகத்தின் தினசரி மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டை தொட்டுள்ளது. காற்றாலை மின்சாரம்
கைகொடுத்தால் மட்டுமே மே மாத மின் தேவையை சமாளிக்க முடியும்.கடந்த 15 மாலை தமிழகத்தின் மின் தேவை 14 ஆயிரத்து, 969 மெகாவாட்டாகஅதிகரித்து புதிய வரலாறு படைத்தது.
பள்ளிக்கூடங்களில் விடுமுறை நாட்களில் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் நடத்தக்கூடாது அதிகாரி எச்சரிக்கை
பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளை நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எச்சரிக்கை தமிழ்நாடு முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் உயர்நிலைப்பள்ளிகள், தனியார் மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் 2016-2017-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகள் 20 லட்சத்திற்கும் மேல் உள்ளனர்.
பிளஸ் 1லும் 'ஆல் பாஸ்:' ஆசிரியர்கள் குழப்பம்.
பிளஸ் 1 மாணவர்களுக்கு கண்டிப்பாக, 95 சதவீத தேர்ச்சி வழங்க வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதால், பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்து உள்ளன. அதனால், பல பள்ளிகள், தேர்ச்சி தகுதி இல்லாத மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் எனப்படும், 'டிசி'யை கட்டாயமாக கொடுத்து வெளியேற்ற முயற்சித்துள்ளன.
இரண்டு நாட்களில் 40 ஆயிரம் பேர் இன்ஜி., படிக்க விண்ணப்பம்.
பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கல்வித் தரத்தை முன்னேற்ற வழிகாட்டுமா கட்சிகள்?
தரமான கல்வியை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்பது நீண்ட நாளாக, நாடு முழுவதும் பேசப்படுவதாகும். கல்விக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது, கோத்தாரி குழு தெரிவித்த கருத்தாகும்.கல்வியில் கேரளாவும், தமிழகமும் முன்னிற்கின்றன. உயர்நிலைக் கல்வியில் ஆந்திரா முன்னிற்கிறது. இந்தப் பின்னணியில், சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு தரும் நடைமுறை கட்டாயமாகிறது. கல்வி என்பது மாநில அரசின் நிர்வாகப்பட்டியலில் வருவதால், மத்திய அரசால், கல்வித்திறனை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பையும் நிதி வசதிகளையும் மட்டுமே தரமுடியும்.
Saturday, April 16, 2016
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.தொடக்கக்கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
வேண்டுகோள்.
தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தலைநகரில் மே
மாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம். ஆனால் இந்தாண்டு; பொது
மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பத்தை கூட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம்
இருந்து பெறாமல் கல்வித்துறை காலம் தாழ்த்தி வருகிறது.
வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த 77 % மாணவர்கள் எம்சிஐ டெஸ்டில் பெயில்!!
வெளிநாடுகளில் மருத்துவ டாக்டர்கள் பட்டம் படித்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் இங்கு நடந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) டெஸ்டில் தோல்வியுற்றுள்ளனர்.77 சதவீத மாணவர்கள் இந்த மருத்துவத் தேர்வில் தோல்வியுற்று இருப்பது எம்சிஐ அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பு படித்தாலும் இந்தியாவில் டாக்டர்களாக தொழில் செய்ய வேண்டுமென்றால் எம்சிஐ நடத்தும் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.
அவ்வாறு எம்சிஐ நடத்திய தேர்வுகளில் 77 சதவீத வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த மாணவர்கள் பெயிலாகியுள்ளனர்.கடந்த 12 ஆண்டுகளில் நடந்தத் தேர்வு முடிவுகளாகும் இது.இந்தத் தேர்வை எம்சிஐ, நேஷனல் போர்ட் ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ் (என்பிஇ) உதவியுடன் நடத்துகிறது.தற்போது என்பிஇ கொடுத்த புள்ளி விவரங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள்:
1)மதிப்பெண் பதிவேடு
2)தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
3)மக்கள் தொகை சுருக்கம்
4)5 குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
5)இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
6)பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
7)மாற்றுத்திறனாளிகள் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
8)குழந்தைதொழிலாளர் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
9) EERசுருக்கம்
10)பள்ளி வேலை நாட்கள் விபரம்
11) கோடைவிடுமுறை அனுமதி
12) ஆசிரியர் கோடை விடுமுறை கால முகவரி விவரம்.
13) 2015-2016 ஆம் கல்வியாண்டு-ஆசிரியர் விடுப்பு விவரம்.
வரும் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 24 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்
எதிர் வரும் கல்வி ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியில் 10 பள்ளிகளில் ரூ. 24 கோடியில் 12 ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட எஸ்.கே.சி. சாலை நடுநிலைப் பள்ளி, காவிரி சாலை நடுநிலைப் பள்ளி, காளைமாடு சிலை ஆசிரியர் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி, ஓடக்காட்டுவலசு மேல்நிலைப் பள்ளி, ஜவுளி நகர் நடுநிலைப் பள்ளி, பி.பி.அக்ரஹாரம் நடுநிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பாளையம் மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு ஆசிரியர் காலனி நடுநிலைப் பள்ளி ஆகிய 10 மாநகராட்சிப் பள்ளிகளில் வருகிற கல்வி ஆண்டு முதல் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.இதற்கான பணிகளை கோவை பியூச்சர் எரா என்ற தனியார் நிறுவனம் செய்து வருகிறது. ரயில்வே காலனி மற்றும் கருங்கல்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலா 2 வகுப்புகளும், பிற பள்ளிகளில் தலா ஒரு வகுப்பும் என மொத்தம் ரூ. 24 கோடியில் 12 வகுப்புகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு !
பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளது.
இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 74 பைசாவும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு ஒரு
ரூபாய் 30 பைசா என்ற அளவிலும் குறைத்துளளது. . இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 நாட்களில் வெயிலின் அளவு 105.8 டிகிரி வரை உயரக்கூடும்
சென்னையில் அடுத்த 2 நாட்களில் வெயிலின் அளவு 105.8 டிகிரி வரை உயரக்கூடும் என்றும், பகலில் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.அனல்காற்று வீசுகிறதுஇந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அனல்காற்று வீசிவருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெயில் கொளுத்தி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.வானிலை ஆய்வு மைய தகவலின்படி தற்போது மத்திய பிரதேசம், மராட்டியம், பீகார், ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்கள் மற்றும் ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடுமையான அனல்காற்று வீசிவருகிறது.
Friday, April 15, 2016
பி.இ. சேர்க்கை: இன்று முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்
2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. முதல் முறையாக இந்த வசதியை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்ப விநியோகம் கிடையாது. பிளஸ்-2 மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து -"செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை' என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
உயிரிழப்பை தடுக்க மருத்துவ குழுஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக, நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும்' என, ஆசிரியர்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:
தேர்தல் பணியை ஆசிரியர்கள் தங்கள் கடமையாக மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அடிப்படை வசதி இல்லாததாலும், நெருக்கடியான வேலைப்பளுவாலும், கடந்த காலங்களில் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர், சரியான முதலுதவி மற்றும் மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் உயிர் இழந்துள்ளனர். எனவே, இந்த பிரச்னைகளை போக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த 48 மணி நேரத்தில் கடும் வெயில்: வானிலை மையம்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் (98.6 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை (105.8 டிகிரி பாரன்ஹீர் வரை) உயரக் கூடும். எனவே தமிழகத்தின் கடலோரா மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், பகல் நேரங்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். சென்னை, அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் பகல் நேரங்களில் அனல்காற்றும், வெப்பமும் அதிகரித்துக் காணப்படும். தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பெற்றோர் அலைச்சல்...!!
பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். பிளஸ் 1, 2 வகுப்புக்கான கணிதம், வரலாறு ஆகிய புத்தகங்கள் மார்க்கெட்டில் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதனால் குழந்தைகளின் பெற்றோர் அந்தப் புத்தகங்களுக்காக மார்க்கெட்
முழுவதும் தேடித் தேடி வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக என்சிஇஆர்டி-க்கும் புகார் அனுப்பப்ட்டுள்ளது.
புத்தகங்கள் விநியோகஸ்தர்களுக்குக் குறைந்த அளவே வந்துள்ளன. இதனால் புத்தகக் கடை விற்பனையாளர்களுக்கும் குறைந்த அளவே புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று என்சிஇஆர்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிக வெப்பம் !
இந்தியா முழுவதும் கோடை காலம் துவங்கி வெப்ப அலை வீசுவதால், இந்த கோடைகாலம் வழக்கத்தைவிட கடுமையானதாகியிருக்கிறது.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெயிலின் காரணமாக சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் திங்கட்கிழமையன்று 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஏப்ரல் மாதத்தில் இந்த அளவு வெயில்
அந்நகரத்தில் இருந்தது இதுவே முதல் முறையாகும்.
பருவமழைக்கு முன்பாக இந்தியா முழுவதும் நல்ல வெயில் இருப்பது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வழக்கத்தைவிட அதிகமான அளவில் வெயில் அடித்துவருகிறது. அதுவும் குறித்த காலத்திற்கு முன்பாகவே கடும் வெப்பம் நிலவுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசிநாள்: ஆட்சியர் தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வெள்ளிக்கிழமை கடைசிநாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
Thursday, April 14, 2016
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் 2015 நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் 2015 நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
CBSE - UGC NET (National Eligibility Test) DECEMBER 2015 RESULTS PUBLISHED
Click Here
பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கும் !
பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது.
எனவே, வரும் கல்வி ஆண்டிலும் பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாளில் பல மாற்றங்கள்செய்யப்பட்டன.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 15 வயதுள்ள பெண் குழந்தைகளும் சேரலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு
செல்வமகள் சேமிப்பு கணக்கில் பிறந்த குழந்தைமுதல் 14வயதான சிறுமிகள் வரைஇணையலாம் என்ற நிலை இருந்தது. இனி 15 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம் என்றுஅஞ்சல் துறை
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்தியபத்திரிகை தகவல்அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''பெண் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்னும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்ததிட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 12லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் உள்ளன. சென்னை நகர மண்டல அஞ்சல்வட்டத்தில் 4 லட்சத்து 38 ஆயிரம்கணக்குகள் உள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணி
இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager
காலியிடங்கள்: 05
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 16
பணி: Assistant Librarian
காலியிடங்கள்: 06
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
வாசகர்கள் , பார்வையாளர்கள், ஆசிரியர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., இரண்டும் சமம்!
மத்திய அரசால், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.,) அதிக முக்கியத்துவம் பெற்று வந்தன!
ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு, சமீபகாலமாக ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவின. தற்போது, ஐ.ஐ.டி.,களுக்கு இணையானதாக என்.ஐ.டி.,களை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, ஐ.ஐ.டி.,களை விடவும், அதிக நிதியை என்.ஐ.டி.,களுக்கு மத்திய அரசு வழங்கிவருகிறது!
மேலும், இதுவரை என்.ஐ.டி.,களில் சேர ஜே.இ.இ., ,மெயின் எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும்; ஆனால், ஐ.ஐ.டி.,களில் சேர ஜே.இ.இ., மெயின் எழுதியவர்கள் மட்டுமே எழுத தகுதி பெற்ற ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் எழுத வேண்டும். ஆனால், தற்போது இந்த இரண்டு தேர்வுகளுக்கும் இணையாக மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.
Wednesday, April 13, 2016
யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காத்திருக்கும் பணியிடங்கள்!!
டெல்லி: யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (யுபிஐ) கம்பெனி செக்கரட்டரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். கம்பெனி செக்கரட்டரி பணியிடங்கள் 2-ம், அதிகாரி (செக்யூரிட்டி) பணியிடங்கள் 5-ம் காலியாகவுள்ளன.
டிசம்பர் மாத -நெட்- தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய ... தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம்... நாம் இருக்கும் தொகுதியை விட்டு வேறு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டால் படிவம் 12 மட்டும் தர வேண்டும் .... நாம் இருக்கும் தொகுதியிலேயே தேர்தல் பணி என்றால் படிவம் 12ஏ பூர்த்தி செய்து நமது வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டும்
'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2013ல், பொதுநுழைவுத் தேர்வு நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி இந்திய மருத்துவக்
கவுன்சில் மனு தாக்கல் செய்தது.
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 16ல் துவக்கம்
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ல் துவங்குகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்று முடிந்தது. தமிழ் அல்லாத பிறமொழி மாணவர்களுக்கு மட்டும், இன்று விருப்ப மொழி பாடத்தேர்வுடன், அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.
ஏப்., 16 முதல், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பல மாவட்டங்களில், மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் துவங்கி உள்ளதால், விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் பள்ளிகளில் இடங்களை வாடகைக்கு எடுத்து, விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.
Tuesday, April 12, 2016
இன்றுடன் தேர்வுகள் முடிகின்றன !!!
சென்னை மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கிய 10ம் வகுப்பு தேர்வு இன்றுடன் முடிவடைகிறது.தமிழகம், புதுச்சேரியில் இந்த தேர்வில் மட்டும் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி
வருகின்றனர்.சென்னை மாவட்டத்தில் 574 பள்ளிகளை சேர்ந்த 53 ஆயிரத்து 159 மாணவ மாணவியரும், புதுச்சேரியை சேர்ந்த 298 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரம் மாணவ மாணவியரும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர்.
ஸ்டேட் வங்கியில் 17,140 பணியிடங்கள் தமிழகத்திற்கு 1541 இடங்கள்
ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து 140 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்திற்கு 1541 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'. நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் தற்போது 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்பு மீண்டும் கலந்தாய்வு துவங்கியது!
மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், ஏப்., 4 முதல், 7ம் தேதி வரை நடந்தது.
ஏப்ரல் - புதிய நிதியாண்டில் நீங்கள் செய்ய வேண்டியவை
நிதியாண்டின் துவக்கம் நிதி திட்டமிடலை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள சரியான தருணமாக கருதப்படுகிறது. இந்த நிதியாண்டிற்கான நிதி திட்டமிடலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
வட்டி விகித குறைப்பு, வட்டி விகித கணக்கீடு முறையில் மாற்றம் என புதிய நிதியாண்டு மாற்றங்களுடன் பிறந்திருக்கிறது. இதற்கு முன்னர் சிறுசேமிப்பிற்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் உங்களின் சேமிப்பு, முதலீடு இரண்டிலுமே தாக்கத்தை செலுத்தும் நிலையில் நிதி திட்டமிடலை ஆய்வு செய்வதற்கான சரியான தருணமாக இது அமைகிறது. வட்டி குறைப்பு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ள சூழலில் சேமிப்பு மற்றும் டிபாசிட் மீதான வட்டியும் குறைய வாய்ப்புள்ளது. இந்த பின்னணியில் ஒருவர் தனது நிதி இலக்குகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வதோடு புதிய இலக்குகள் இருந்தால் அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.
தேர்தலில் ஓட்டுப்போட வேண்டுமா? புதிய வாக்காளராக சேர இன்னும் 4 நாள்தான்...
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமை நடத்தி வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டு இந்த மாதம் 15ம் தேதி வரையிலும் 18 வயதை அடைந்த அனைத்து வாக்காளர்களும் புதிதாக தங்களது வாக்குகளை சேர்த்துகொள்ளலாம்.
25 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் சேர்த்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. இதில் பதியப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும்.உரிய ஆதாரங்கள், குடியிருப்பு சரியாக இருந்தால் வரக்கூடிய சட்டசபை தேர்தலில் வாக்களித்துகொள்ளலாம். எனவே இளம் வாக்காளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், முகவரி மாற்றம், உள்ளிட்ட பணிகளுடன், வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போய் இருந்தாலோ, டேமேஜ் ஆக இருந்தாலோ பணம் கட்டி மாற்றிக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை
Manonmaniam Sundaranar University DD&CE- MAY-2016 - UG/PG/B.Ed/M.Phil Examinations Timetable Announced.
Click Here
மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த ...2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டில், மருத்துவக் கல்லுாரிகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த, 2013 ஜூலையில், பொது நுழைவுத்தேர்வு நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வில், அப்போதைய தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதி விக்ரமஜித் சென் ஆகியோர், இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவை ரத்து செய்தனர். அதே நேரத்தில், நீதிபதி தவே, நுழைவுத்தேர்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், அனில் ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது
Monday, April 11, 2016
தேசிய கீதம், தேசிய கொடிக்கு அவமதிப்பா? நடவடிக்கையில் இறங்க மாநிலங்களுக்கு உத்தரவு
தேசிய கீதத்துக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்து, ஏராளமான புகார்கள் குவிகின்றன. இதையடுத்து, இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டங்களை அமல்படுத்தும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு வின் நினைவு நாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுசம்பந்தமாக, பல்கலையின் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில், தேசப்பற்று, தேசபக்தி பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன.
தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலை... அசத்தல்அரசு பொறியியல் கல்லூரிக்கு 13வது இடம்
மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 13வது இடத்தையும், அரசு பொறியியல் கல்லுாரி 49வது இடத்தையும் பிடித்துள்ளதால், இந்தாண்டு விண்ணப்பங்கள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம், சிறந்த கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக 'ரேங்கிங்' திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்காக என்.ஆர்.ஐ.எப்.,தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டது.
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த ரேங்கிங் பட்டியலில் இடம் பெறுவதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் வரை விண்ணப்பங்களை அனுப்பி இருந்தன.
JEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்.
அடுத்த கல்வியாண்டு முதல், பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கான, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.தேசிய கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்நுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்' எடுக்கவேண்டும்நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணை,40 சதவீதத்திற்கு கணக்கிட்டு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக மாற்றி சேர்ப்பார்கள்.
இதன் பிறகே, கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.இந்த தேர்வுக்காக, நாடு முழுவதும் மாணவர்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர். அதனால், ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி மையத்திற்கு, குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்துகின்றனர். இந்த அடிப்படையில், நாடு முழுவதும், 24 ஆயிரம் கோடி ரூபாய் பயிற்சி மையங்களுக்கு கட்டணமாக வசூலாகிறது.அத்துடன், மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல்,பயிற்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். எனவே, ஐ.ஐ.டி., மாணவர்களில் பலர், ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.எனவே, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு முறையை மாற்ற, ரூர்கி ஐ.ஐ.டி., பேராசிரியர் அசோக் மிஸ்ரா தலைமையிலான ஆய்வு கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. இந்த கமிட்டியினர், 2015 நவம்பர், 5ல் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.இந்த அறிக்கையின் கீழ், பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்ட பின் புதிய முடிவை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய அரசு அறிவித்துள்ள புதிய முறை:இனி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்த பட்சம், 75 சதவீதமதிப்பெண் அல்லது அதிகபட்ச முதல் மதிப்பெண்ணில் இருந்து, 20 சதவீதத்திற்குள் மதிப்பெண் பெற்றால் மட்டுமே ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை எழுத முடியும். ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்'பெற வேண்டும் பிளஸ் 2 மதிப்பெண்ணில், 40 சதவீதம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக சேர்க்கப்படாது; இந்த முறை கைவிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி தொடர் தர்ணா: ஆசிரியர்களுடன் மந்திரி நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 13-ந்தேதி முடிவை அறிவிப்பதாக மந்திரி பேட்டி
சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் மந்திரி நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பாக 13-ந் தேதி முடிவை அறிவிப்பதாக மந்திரி கூறியுள்ளார்.
தொடர் தர்ணா
சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெங்களூருவில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்-மந்திரி சித்தராமையா ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து கடந்த சில நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தினார். தர்ணா போராட்டத்தை கைவிட்டு மாணவர்களின் நலன் கருதி விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன கலெக்டர் ஆய்வு
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணியினை கலெக்டர் நந்தகோபால் நேரில் ஆய்வு செய்தார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 16–ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான படிவங்கள், வாக்குப் பெட்டியை சுற்றிலும் வைக்கப்படும் அட்டைகள், கோந்து, வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்படும் ஊக்கு உள்பட அனைத்து பொருட்களையும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தது. தேர்தல் ஆணையத்தால் வேலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த அனைத்து பொருட்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் வைக்கப்பட்டு இருந்தது.
Saturday, April 9, 2016
இணையதளத்தில் அரசாணைகள் வெளியிட வழக்கு .
தமிழக அரசு அரசாணை, அறிவிப்புகளை இணையதளத்தில் வெளியிட தாக்கலான வழக்கில், 'அரசாணைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அனைத்துத் துறைகளுக்கும் 2014ல் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை முறையாக அமல்படுத்தினாலே போதுமானது,' எனக்கூறி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக அரசு அரசாணை, அறிவிப்புகள், விதிகள், சுற்றறிக்கைகளை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது. இதனால், அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை. அரசாணைகள் பற்றி தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரினால், முழுமையான பதில் இல்லை.மத்திய அரசு அரசாணைகளை, அதன் இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடுகிறது. அரசாணைகள், அறிவிப்புகளை இணையதளத்தில் வெளியிட்டால்தான், மக்கள் பயனடைய முடியும். இதை வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். அரசாணை, அறிவிப்புகள், சுற்றறிக்கை, விதிகளை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ரமேஷ் மனு செய்திருந்தார்.
DA from January 2016 is 125% for Central Government Employees – Orders issued by Govt
DA from January 2016 is 125% – Orders issued by Govt for payment of Dearness Allowance of 125% from January 2016 – Increased by 6%
DA from January 2016 for Central Government Employees has been increased from 119% to 125%. Finance Ministry has issued orders today to this effect. Earlier Union Cabinet had given its approval for hiking Dearness Allowance of Central Government Employees and Pensioners with effect from 1st January 2016. While dearness allowance for April 2016 would be paid at revised rate along with pay and other allowances for the month of April 2016, arrears of DA for the period from 1st January 2016 to March 2016 would be paid in cash all Central government Employees. In respect of all Central Government Pensioners separate orders will be issued by Department of Pension and Pensioners’s welfare.
பள்ளி பஸ் விதிமுறைகள் அமலாவதில் என்ன பிரச்னை?
பள்ளி பஸ்களுக்காக கொண்டு வரப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வு என்ன என்பதை, பள்ளிகள் தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள சியோன் பள்ளி பஸ்சில் உள்ள ஓட்டை வழியாக, சிறுமி கீழே விழுந்து பலியான சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது; 2012 ஜூலையில் சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், பள்ளி பஸ்களுக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வரும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, புதிய விதிமுறைகளை தமிழக அரசு கொண்டு வந்தது.
பள்ளி ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் பயிற்சி: கல்வித் தரத்தை உயர்த்த டெல்லி அரசு அதிரடி
அரசுப் பள்ளிகளில் ஆசியர்களாக பணியாற்றுபவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு தீர்மானித்துள்ளது.
இந்தியாவிலும் வெளிநாடுகளுக்கு நிகரான கல்வித்தரத்தை கொண்டுவர வேண்டும் என இங்குள்ள பல மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஒருகட்டமாக, டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி அங்குள்ள பிரபல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.
வாட்ஸ்அப்பில் இனி தகவல்களை திருட முடியாது:
புதிய வசதி அறிமுகம்.
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப் படத்தை இனிமேல் யாரும் திருடவோ, இடைமறித்துக் பார்க்கவோ முடியாத வகையில் மறையாக்கம் (என்க்ரிப்ஷன்) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வாட்ஸ் அப் குழு எண்ணிக்கை வரம்பு 100-ல் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பயனாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கும் வகையில் முதல்முறையாக மறை யாக்கம் எனப்படும் என்க்ரிப்ஷன் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படம் என எதுவாக இருந்தாலும் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க் கவோ முடியாது. புதிய வெர்ஷன் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத் துவோர் இனிமேல் கவலையின்றி தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். வாட்ஸ் அப்பில் மறையாக் கம் வசதி அறிமுகம் செய்யப்பட்டி ருப்பது அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட உலக நாடு களை கவலையடையச் செய்துள் ளது. இது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளன. ஆனால் வாட்ஸ்அப் நிர்வாகம் கூறியபோது மறையாக்கம் வசதி யால் தீவிரவாதிகளால் இனிமேல் தகவல்களை திருட முடியாது என்று தெரிவித்துள்ளது
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப் படத்தை இனிமேல் யாரும் திருடவோ, இடைமறித்துக் பார்க்கவோ முடியாத வகையில் மறையாக்கம் (என்க்ரிப்ஷன்) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வாட்ஸ் அப் குழு எண்ணிக்கை வரம்பு 100-ல் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பயனாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கும் வகையில் முதல்முறையாக மறை யாக்கம் எனப்படும் என்க்ரிப்ஷன் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படம் என எதுவாக இருந்தாலும் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க் கவோ முடியாது. புதிய வெர்ஷன் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத் துவோர் இனிமேல் கவலையின்றி தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். வாட்ஸ் அப்பில் மறையாக் கம் வசதி அறிமுகம் செய்யப்பட்டி ருப்பது அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட உலக நாடு களை கவலையடையச் செய்துள் ளது. இது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளன. ஆனால் வாட்ஸ்அப் நிர்வாகம் கூறியபோது மறையாக்கம் வசதி யால் தீவிரவாதிகளால் இனிமேல் தகவல்களை திருட முடியாது என்று தெரிவித்துள்ளது
Friday, April 8, 2016
பிளஸ்-2 கணித தேர்வில் தவறான வினாவுக்கு 6 கருணை மதிப்பெண்: அரசு தேர்வுத்துறை உத்தரவு.
பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடி வடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங் கியது. தமிழகம் முழுவதும் 64 மையங்களில் பிளஸ்-2 விடைத் தாள்கள் திருத்தப்பட்டு வருகின் றன. பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்படும் வினாக்களுக்கு கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பிளஸ்-2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தை விட்டு வெளியே கேட்கப்பட்டிருந்த இரு வினாக் களுக்கு 6 கருணை மதிப்பெண் அளிக்க அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடி வடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங் கியது. தமிழகம் முழுவதும் 64 மையங்களில் பிளஸ்-2 விடைத் தாள்கள் திருத்தப்பட்டு வருகின் றன. பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்படும் வினாக்களுக்கு கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பிளஸ்-2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தை விட்டு வெளியே கேட்கப்பட்டிருந்த இரு வினாக் களுக்கு 6 கருணை மதிப்பெண் அளிக்க அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இருக்காது: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.
கிராமப்புற மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கும் முறை கொண்டுவரப் படாது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மாணவர்கள் வரவேற்புதமிழகத்தில் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத் துவத்துக்கான விண்ணப்பங் களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறை இருந்து வந்தது
. சோதனை முயற்சியாகபொறியியல் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறையுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையும் கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும்முறை அமல்படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இவைதவிர விவசாயம், தோட்டக்கலை, வனவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கும் முறை அமலில் இருக்கிறது. ஆனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு களுக்கு மட்டும் இன்னும் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும்N முறையேஅமலில் இருக்கிறது. சோதனை முயற்சியாகக்கூட ஆன்லைன் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகொண்டுவரப்படவில்லை.
Subscribe to:
Posts (Atom)