Pages

Friday, April 15, 2016

பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பெற்றோர் அலைச்சல்...!!


பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். பிளஸ் 1, 2 வகுப்புக்கான கணிதம், வரலாறு ஆகிய புத்தகங்கள் மார்க்கெட்டில் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதனால் குழந்தைகளின் பெற்றோர் அந்தப் புத்தகங்களுக்காக மார்க்கெட்
முழுவதும் தேடித் தேடி வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக என்சிஇஆர்டி-க்கும் புகார் அனுப்பப்ட்டுள்ளது.
புத்தகங்கள் விநியோகஸ்தர்களுக்குக் குறைந்த அளவே வந்துள்ளன. இதனால் புத்தகக் கடை விற்பனையாளர்களுக்கும் குறைந்த அளவே புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று என்சிஇஆர்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ஆனால் மார்க்கெட்டுகளில் புத்தகங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாக தென்மேற்கு டெல்லியைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர். இதனிடையே ஒரிஜினல் புத்தகங்களை ஜெராக்ஸ் செய்து அதை பைண்ட் செய்து தனது குழந்தைக்கு வழங்கியதாக மாணவர் ஒருவரினஅ பெறறோர் தெரிவித்தார். இந்த நிலையில் தங்களது விநியோக மையத்தில் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் என்சிஆர்இடி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment