பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ல் ஆரம்பித்து ஏப்ரல்11-ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப் பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத் தில் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன. எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையும் நிலையில்தான் உள்ளது.
பொதுவாக பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் முடிந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்றுக் கொண்டிருக் கும்போதே தேர்வு முடிவுகள் தொடர்பான செய்திகள் ஊடகங் களில் வெளியாவது வழக்கம். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தொடர்பான யூகங்களால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்துக்கு உள்ளாவதை தடுக்கும் வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விவரங்களை அரசு தேர்வுத்துறை அதிகாரபூர்வமாக முன்கூட்டியே வெளியிடும் நடைமுறையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதே நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில், பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் முடிவுகள் எப்போது என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத் துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண்களை தொகுக்கும் பணி நடைபெற்று வரும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment