தேசிய கீதத்துக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்து, ஏராளமான புகார்கள் குவிகின்றன. இதையடுத்து, இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டங்களை அமல்படுத்தும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு வின் நினைவு நாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுசம்பந்தமாக, பல்கலையின் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில், தேசப்பற்று, தேசபக்தி பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன.
மத்திய அரசு கடிதம்:இந்தச் சூழ்நிலையில்,
தேசிய கீதத்துக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு ஏற்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து வருவதாக, மத்திய அரசுக்கு, பல தரப்பில் இருந்தும் புகார்கள் சென்றுள்ளன.இதைத் தடுக்க, இதுதொடர்பான சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்தும்படி, அந்த சட்ட விதிகளின் நகல்களை இணைத்து, மாநில அரசுகளுக்கு, மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
3 ஆண்டு சிறை:: மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதம்:தேசிய கீதம் மற்றும் தேசியக் கொடிக்கு அவமதிப்பு செய்வதாக புகார்கள் வந்துள்ளன. இவற்றின் கவுரவம் பாது காக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். விதிகளை மீறுவோருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கீதம் இசைப்பது எப்படி?:மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:பல்வேறு நிகழ்ச்சிகளின் போது, தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. தேசிய கீதத்தை சரியான முறையில்இசைக்க வேண்டும் என, அவ்வப்போது அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன. முழு தேசிய கீதம், 52 வினாடிகள் இசைக்கப்பட வேண்டும். அதன் சுருக்கம், 20 வினாடிகள் இசைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கொடி வேண்டாமே:தற்போது, பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட தேசியக் கொடிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
இதை தவிர்க்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதம்: முக்கிய நிகழ்வுகளின் போது, பேப்பர்களால் செய்யப்பட்ட தேசியக் கொடிக்கு மாற்றாக, பிளாஸ்டிக் கொடிகள் பயன் படுத்தப்படுவது குறித்து அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.
பிளாஸ்டிக் கொடிகள், இயற்கையாக, மக்கும் தன்மை அற்றவை. அதனால், தேசியக் கொடிக் கான கவுரவத்துடன், அவற்றை அழிப்பது என்பது சிக்கலான விஷயம்.
தேசிய கவுரவ சட்டப் படி, தேசியக் கொடிகளை, கிழிப்பது, சேதப்படுத்துவது, எரிப்பது ஆகியவை அதை அவமதிக்கும் செயலாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment