10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே6-ம் தேதி வெளியாகவுள்ளன.இந்த முடிவுகளை சிஐஎஸ்இசி கல்வி வாரியம் வெளியிடவுள்ளது.இதுகுறித்து சிஐஎஸ்இசி கல்வி வாரியத்தின் தலைமைச் செயலல் அதிகாரியும்,செயலருமான கெர்ரி அராத்தூன் கூறியதாவது:
தேர்வு முடிவுகளை www.cisce.org/ என்ற இணையதளத்தில் காணலாம்.மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிவுகளை அறியமுடியும்.முடிவுகளை அறிய விரும்புபவர்கள் ஐசிஎஸ்இ அல்லது ஐஎஸ்சி என டைப் செய்துஐடி கோட் எண்ணை டைப் செய்து 09248082883 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியமுடியும்.தேர்வு முடிவுகளுக்காக எல்ஐசிஆர் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் வேகமாக முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.மே6-ம் தேதி பிற்பகல்3மணிக்கு முடிவுகளை அறியலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment