மதுரை பசுமலை அரசு இசைக்கல்லுாரியில் 2016-17ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளதாவது: இக்கல்லுாரியில் 3 ஆண்டு பட்டய வகுப்புகளான குரலிசை, வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதஸ்வரம், நாட்டுப்புறக்கலை வகுப்புகள் நடக்கின்றன.
13-18 வயதுள்ள, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இசைக்கலைமணி பட்டயம் தேர்ச்சியுடன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இளங்கலை இசையில் (பி.ஏ., மியூசிக்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு கால இசை ஆசிரியர் பட்டயப்பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இதில் 15-25 வயதிற்கு உட்பட்டோர் சேரலாம்.
தவிர, குரலிசையை முதன்மை பாடமாகவும், வயலினை துணைப்பாடமாகவும் கொண்டு 3 ஆண்டு பி.ஏ., மியூசிக் வகுப்புகளுக்கான சேர்க்கை நடக்கிறது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 -22 வயதுள்ளவர்கள் சேரலாம். இதில் பயிலுவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.500 வழங்கப்படும்.
சனி, ஞாயிறுகளில் குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், பரதநாட்டியம் இரண்டு ஆண்டு சான்றிதழ் படிப்புகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் சேரலாம். விபரங்களுக்கு 93807 84304ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment