மதுரை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காந்திகிராமம் அருகே லக்ஸர் வேர்ல்டு பள்ளி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரே சர்வதேச பள்ளியான இது, ஐந்தாவது ஆண்டை வெற்றிகரமாக துவக்கி உள்ளது. ஐ.ஜி.சி.எஸ்.இ கல்வி முறை உலக மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இதில் வாய்வழி கற்கும் திறன், விசாரணை திறமை, பிரச்னைகளை சரிசெய்தல்,
குழுவேலை, அறிவு, நினைவுத்திறன், முயற்சிகளை உருவாக்குவது போன்ற திறன்கள் ஊக்குவிக்கப்படுகிறது.
இது உலக அளவில் நிலையான நம்பகத்தன்மை பெற்ற கல்வி முறை. இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளால் பின்பற்றப்படுகிறது. ஐ.ஜி.சி.எஸ்.இ கல்வி, இந்திய பல்கலை கழகங்கள் கூட்டமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டது. பிரிட்டன் மற்றும் காமன்வெல்த் நாடுகளிலும் உலகளவில் 140க்கும் மேற்பட்ட நாடுகளின் பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத் திட்டத்தில் கேம்பிரிட்ஜ் செக் பாயின்ட் மற்றும் தரப்படுத்தப்பட்ட சோதனைகள் மூலம் மாணவனின் பலவீனங்களை கண்டறிந்து மேம்படுத்த முடிகிறது. இங்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிப்பதால் உயிர்காக்கும் கலையையும் மாணவர்கள் பயில்கின்றனர்.
போட்டி நிறைந்த சூழலில் மேல்நாட்டு மாணவர்களுக்கு இணையாக திண்டுக்கல் மாணவர்களை உருவாக்குவதே லக்ஸர் பள்ளியின் நோக்கம். - சுவாமிநாதன், தாளாளர், லக்ஸர் வேர்ல்டு பள்ளி.
No comments:
Post a Comment