Pages

Saturday, May 7, 2016

பள்ளிகளில் யோகா கட்டாயம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுருத்தியுள்ளது.


நாடு முழுவதும் பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை கட்டாயம் ஆக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்தகவலை மத்திய ‘ஆயுஷ்’ துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘வரும் கல்வி ஆண்டில், அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கும் என்று கருதுகிறோம். யோகா செய்ய விரும்பும் மாணவர்களை அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், உடற்பயிற்சி வகுப்பிலாவது அதற்கு வசதி செய்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.
போலீசாருக்கு யோகா கட்டாயம் ஆக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு படையினருக்கும் கட்டாயம் ஆக்கும் பணி நடந்து வருகிறது’ என்றார்.

No comments:

Post a Comment