தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக, நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும்' என, ஆசிரியர்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:
தேர்தல் பணியை ஆசிரியர்கள் தங்கள் கடமையாக மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அடிப்படை வசதி இல்லாததாலும், நெருக்கடியான வேலைப்பளுவாலும், கடந்த காலங்களில் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர், சரியான முதலுதவி மற்றும் மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் உயிர் இழந்துள்ளனர். எனவே, இந்த பிரச்னைகளை போக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களை, 50 கி.மீ., துாரத்திற்குள் பணி அமர்த்த வேண்டும்
* ஓட்டுச்சாவடி மையங்களில் உரிய பாதுகாப்பு இருப்பதை, தேர்தல் கமிஷன் உறுதிப்படுத்த வேண்டும்
* போக்குவரத்து இல்லாத பகுதிகளில் பணி அமர்த்தப்படுபவர்களுக்கு, வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்; உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்
* கடந்த முறை ஏற்பட்டது போல், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க, நடமாடும் மருத்துவக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment