Pages

Thursday, April 28, 2016

மெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு...!!


மெட்ராஸ் ஐஐடி நடத்தும் ஹிமானிடீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ் நுழைவுத் தேர்வு (எச்எஸ்இஇ) முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுகள் கடந்த 17-ம் தேதி நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகள் மே 11-ம் தேதி வெளியாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் ஒருங்கிணைந்த எம்.ஏ படிப்பு (ஆங்கிலம்), எம்ஏ (வெலப்மெண்ட் ஸ்டடீஸ்) ஆகிய படிப்புகளில் சேர முடியும். இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
இந்தத் தேர்வானது 3 மணி நேரம் நடைபெறும். தாள் 1, தாள் 2 என இரு தேர்வுகள் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு

http://www.iitm.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment