Pages

Friday, April 29, 2016

மே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற மே 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, மாவட்டம் முழுவதும் மே மாதம் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.அதற்குப் பதிலாக, அரசு விடுமுறை நாளான மே மாதம் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அச்சகப் பணியாளர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாள்கள் செலாவணி சட்டத்தின் கீழ், இந்த விடுமுறை வராது என்பதால் கருவூலங்கள், சார் நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு மே 14-ஆம் தேதி செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment