சென்னையில் அடுத்த 2 நாட்களில் வெயிலின் அளவு 105.8 டிகிரி வரை உயரக்கூடும் என்றும், பகலில் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.அனல்காற்று வீசுகிறதுஇந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அனல்காற்று வீசிவருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெயில் கொளுத்தி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.வானிலை ஆய்வு மைய தகவலின்படி தற்போது மத்திய பிரதேசம், மராட்டியம், பீகார், ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்கள் மற்றும் ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடுமையான அனல்காற்று வீசிவருகிறது.
மிக அதிகபட்சமாக ஒடிசாவில் 113.9 டிகிரி வெயில் கொளுத்துகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட அனல்காற்று வீசும் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் கடுமை அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வெயிலுக்கு தெலுங்கானா மாநிலத்தில் 35 பேரும், ஒடிசாவில் 30 பேரும் பலியாகி உள்ளனர்.105.8 டிகிரி வரை உயரும்தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. வெயில் கொளுத்துவதால் அனல் காற்றும் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்பநிலை அதிகபட்சமாக 41 செல்சியஸ் (105.8 டிகிரி) வரை உயரக்கூடும் என்றும், அனல்காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனல்காற்றின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால், இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-12 மணி முதல் 3 மணி வரைபொதுமக்கள் அவசிய தேவைகளின்றி வெளியில் செல்ல வேண்டாம். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் அதிகளவில் களைப்படைய வைக்கும் பணிகளை செய்ய வேண்டாம் எனவும், பொதுவாக தண்ணீர் அதிகமாக பருகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவதோடு, குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை பார்க்கிங் செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் எனவும், தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளியே செல்ல நேரும்போது குடிநீர் எடுத்துச் செல்வதுடன், தலை, கழுத்து மற்றும் கை, கால்களை சிறிது ஈரமான துணியினால் மூடிச் செல்லுமாறும், களைப்பாக உணரும்பட்சத்தில் தேவையான அளவு தண்ணீர் பருகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கஞ்சி, பழச்சாறுகள்டீ, காபி போன்ற பானங்கள் தவிர்த்து, மோர், கஞ்சி மற்றும் பழச்சாறுகள் போன்ற பானங்களை அருந்தவும். வெயிலினால் சோர்வு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படும்பட்சத்தில் அருகிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும்.கால்நடைகளை நிழலான இடங்களில் தங்கவைப்பதோடு, அவற்றிற்கு தேவையான அளவு தண்ணீரும் வழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment