வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வெள்ளிக்கிழமை கடைசிநாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
18 வயது தகுதியான வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வெள்ளிக்கிழமை (ஏப்.15) கடைசி நாளாகும். எனவே, வாக்களர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள இணையதள மையங்களுக்குச் சென்று www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலமாக தங்களது விவரங்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும், தங்களது வீட்டில் கணினியோ அல்லது மடிக்கணினியோ இருந்தால் அதன் மூலமாகவும் இணையதளத்திற்குச் சென்று தங்களது பெயரை சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் விவரங்கள் தவறாக இருந்தால் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment