Pages

Wednesday, October 5, 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய 3 கட்ட பதவி உயர்வு; 7வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுக்கு ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசின் ஒரு சில அம்சங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளித்து அமலுக்கு வந்துள்ளது. மற்ற அம்சங்களை அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.




இந்த நிலையில் 7-வது சம்பள கமி‌ஷனில் அனைத்து ஊழியர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாய பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு ஊழியர் 30 ஆண்டு பணியாற்றி இருந்தால் அவருக்கு 3 பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.இதற்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலம் தாண்டினால் அடுத்த கட்ட பதவி உயர்வுக்கான சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. இதனால் ஒரு ஊழியர் ஒரே பணியில் பல ஆண்டுகள் இருக்கும் நிலை இருந்தது.இப்போது 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசின்படி 10 ஆண்டுகள் ஆனாலே அவருக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு கிடைத்து விடும்.

இந்த சிபாரிசை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது பற்றி மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது.
 இதை தொடர்ந்து இப்போது காலகட்ட பதவி உயர்வு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment