10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு
முடிவு தேதி வெளியீடு!
சென்னை: 10 மற்றும் 12ஆம்
வகுப்புகளுக்கான தேர்வு
முடிவுகள் வெளியாகும் தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை
செயலாளர் சபிதா விடுத்துள்ள
அறிவிப்பில், "12ஆம் வகுப்பு தேர்வு
முடிவு மே மாதம் 17ஆம் தேதி
வெளியிடப்படும். அன்று காலை 10
மணிக்கு தேர்வு முடிவுகளை
அறிந்து கொள்ளலாம்.
அதேபோல், 10ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகள் மே மாதம் 25ஆம் தேதி
காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
dge.tn.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in,
dge3.tin.nic.in ஆகிய இணையதளங்களில்
முடிவுகள் வெளியாகும். அதில்,
பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு
செய்து தேர்வு முடிவுகளை
தெரிந்து கொள்ளலாம்'' எனக்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment