Pages

Saturday, April 30, 2016

தமிழக மாணவர்களுக்கு சிக்கல் !


மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வு முறை ரத்து
செய்யப்பட்டு, 2007 முதல், பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி களில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்படுகின்றன. இந்த இடங்களுக்கு மட்டுமே, சி.பி.எஸ்.இ., மூலம், அகில இந்திய மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கோ, சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் இடங்களுக்கோ, நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதில்லை.இதற்காக, 2006ல், 'தமிழ்நாடு தொழில்படிப்பு கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை சட்டம் - 2006' இயற்றப்பட்டதுஇந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பானவழக்கில், சுப்ரீம் கோர்ட், பொது மருத்துவ நுழைவுத்தேர்வை கட்டாயம் ஆக்கி உள்ளது; இது, தமிழகத்தில், 2007 முதல், நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு சிக்கலாகஅமையும்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தின், 'தொழில் ரீதியான கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை சட்டம் - 2006' குறித்து, சுப்ரீம் கோர்ட், எதுவும் தெரிவிக்க வில்லை. இருந்தபோதிலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்தே நுழைவுத்தேர்வு நடத்த வழி வகைசெய்கிறது. தமிழகத்தில் உள்ள சூழல் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தரப்பில் தெளிவுபடுத்தப் பட்டது.வட மாநில மாணவர்கள் ஆதிக்கம் செலுத்துவர் என்பது ஏற்புடையது அல்ல. இருந்த போதும், தமிழகத்தின் தொடர் நடைமுறைகள் குறித்து தெரிவித்து, மறு சீராய்வு கோரி, மாநில அரசு சார்பில், மனு தாக்கல்செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'பொது நுழைவுத்தேர்வு நடந்தாலும், 85 சதவீத இடங்கள், நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழக மாணவர்களுக்குத் தான் கிடைக்கும்' என, சுகாதாரத்துறைஅதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., படித்த மாணவர்கள் தான் அதிக அளவில் இடம் பிடிக்க முடியும் என்பதால், கிராமப்புற மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர்வது சிக்கலாக அமையும்.

'அழுத்தம் தர வேண்டும்'

சுப்ரீம் கோர்ட் உத்தரவு, தமிழக மாணவ, மாணவியரிடம், பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழகத்திற்கு, நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற, மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில், உடனடியாகப் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும், தமிழக நிலைமைகளை தெளிவுபடுத்தவும், மூத்த அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரச் செயலரையும் அனுப்பி வைக்க வேண்டும்.கருணாநிதி, தி.மு.க., தலைவர்

'அவகாசம் வேண்டும்

''மெரிட்' அடிப்படையில் சேர்க்கை என்பது நல்லதுதான். இதற்கு, இரண்டு ஆண்டுகளாவது அவகாசம் கொடுத்து செயல்படுத்தி இருக்க வேண்டும். உடனே செயல்படுத்தினால், சி.பி.எஸ்.இ., தேர்வுஎன்பதால், கிராமப்புற மாணவர்கள் பெரிய அளவில் பாதிப்பர்.கே.செந்தில், தலைவர், தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம்

'சூழலுக்கு ஏற்ப முடிவு'

நுழைவுத்தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும். அதன் மூலம், திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். மிக குறுகிய காலத்தில் இந்த தேர்வை அறிவித்துள்ளதால், நுழைவுத்தேர்வு மதிப்பெண் அளவை, சூழலுக்கு ஏற்ப, தமிழக அரசே முடிவு செய்து, அனைத்து தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில், சேர்க்கை நடத்த வேண்டும்.ஜேம்ஸ்பாண்டியன், இயக்குனர் எஸ்.ஆர்.எம்.,

மருத்துவ பல்கலை'பாதிப்பு வராமல் இருக்க புது ஐடியா'

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தமிழக அரசு, மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்தி, மாணவர்களை சேர்க்க முடியும். அதேநேரம், நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை, 1 சதவீதமாகவும், பிளஸ் 2 மதிப்பெண்ணை, 99 சதவீதமாகவும் கணக்கிட்டு, சேர்க்கை நடத்தலாம். அதனால், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில், நுழைவுத்தேர்வை நடத்தியதாகவும் இருக்கும். ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்

கட்டாயப்படுத்துவது சரியல்ல

தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்து, 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதுகுறித்த சிந்தனையே இல்லாத மாணவர்களை, இரண்டரை மாதங்களில் ஆயத்தமாக வேண்டும் என, கட்டாயப்படுத்து வது சரியல்ல.நுழைவுத்தேர்வுகளை எதிர்க்கும், மாநில அரசுகளுடன் இணைந்து, 'பொது மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியாது' என, தமிழக அரசு அறிவிப்பதோடு, பொது மருத்துவ நுழைவு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்ய வேண்டும்.-அன்புமணி, இளைஞரணி தலைவர், பா.ம.க.,

Posted by tamilnaduteachers news  

No comments:

Post a Comment