Pages

Friday, April 29, 2016

புதிதாக விண்ணப்பித்தவர்களையும் சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் ராஜேஷ் லக்கானி பேட்டி


புதிதாக விண்ணப்பித்தவர்களை சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–வேட்புமனு நிராகரிக்கப்படும்

வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் கூடுதலாக ஒரு உறுதி மொழி கடிதம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பில் தங்கியிருந்து அதற்கான வாடகை, டெலிபோன் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் ஆகியவை பாக்கி இல்லாமல் செலுத்தப்பட்டுள்ளது என்ற வாடகை நிலுவையில்லா சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.உதாரணத்துக்கு எம்.எல்.ஏ விடுதி அல்லது எம்.பி. விடுதிகளில் தங்கியிருந்து அதற்காக வாடகை செலுத்தாதவர்கள், அரசு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து அதற்கான வாடகையை செலுத்தாதவர்கள் நிலுவையில்லா சான்றிதழ் அளிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பில் தங்காதவர்களும் நான் கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பில் தங்கவில்லை என்ற சான்றிதழையும் அளிக்க வேண்டும். அந்த சான்றிதழை வேட்புமனு தாக்கலின்போது அளிக்க முடியாதவர்கள் கடைசி நாளான நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) அளிக்க வேண்டும். இல்லையென்றால் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும்.
பறக்கும்படை கண்காணிப்பு

பணம் பதுக்கி வைத்திருப்பதாக பொதுமக்கள் தகவல் தந்தால் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். கடந்த 4–ந் தேதி முதல் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் ஆணையம் சார்பில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் தான் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.பணம் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் தவிர சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய இடங்களிலும் வருமானவரித்துறை சார்பில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழகத்தில் பறக்கும் படை மற்றும் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில இதுவரை ரூ.61 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் தோராயமாக 8 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்துக்கு வருகிற 1–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை 300 கம்பெனி அதாவது 30 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்காக வர உள்ளனர்.சென்னை பஸ்சில் ரூ.50 லட்சம் பறிமுதல்

பொதுமக்கள் கொடுத்த தகவலால் சென்னையிலிருந்து மதுரைக்கு பஸ்சில் கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரெயில் நிலையங்களிலும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து அந்த ரெயிலை விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இதில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.செலவின பார்வையாளர்கள் வருகை

தற்போது பணியில் உள்ள செலவின பார்வையாளர்கள் நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகத்திலிருந்து புறப்படுகிறார்கள். அவர்களுக்கு பதில் 122 செலவின பார்வையாளர்கள் நாளையே தமிழகம் வருகிறார்கள். நாளை தமிழகத்திலிருந்து சென்ற செலவின பார்வையாளர்கள் மீண்டும் மே மாதம் 3–ந் தேதி தமிழகம் திரும்புகிறார்கள்.தேர்தல் பணிக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் அதாவது ரூ.140 கோடி அரசு பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் படிகள், மதிப்பூதியத்துக்கே செலவாகிறது. எஸ்.எஸ்.எல்.சி, மற்றும் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை வெளியிட எந்த தடையும் கிடையாது. வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களையும் சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும்.துப்பாக்கி அனுப்பியது யார்?

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே அலுவலகத்துக்கு துப்பாக்கி அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment