Pages

Tuesday, April 26, 2016

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்பில் சேர மே 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மே 17–ந்தேதி


எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர மே மாதம் 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 17–ந்தேதி என்றும் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை மல்லிகா தெரிவித்தார்.மே 2–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், அறிவியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளில் சேருவதற்கு அச்சடித்த விண்ணப்பம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆன்லைனிலும் விண்ணப்பித்து வந்தனர். இந்த வருடம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மாணவர்சேர்க்கை செயலாளர் பேராசிரியர் மல்லிகா நிருபர்களிடம் கூறியதாவது:–எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்திற்கான பணத்தையும் ஆன்லைனில் தான் செலுத்தவேண்டும். மாணவ–மாணவிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500. ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 ஆகும்.அடுத்த (மே மாதம்) மாதம் 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.17–ந்தேதி கடைசி நாள்

விண்ணப்பிக்க மே மாதம் 17–ந்தேதி கடைசி நாள்.நுழைவுத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. மே 11–ந்தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை எம்.சி.ஏ. படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 2–30 மணி முதல் மாலை 4–30 மணிவரை எம்.பி.ஏ. படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடக்கிறது.12–ந்தேதி காலை 10 முதல் 12 மணிவரை எம்.இ., எம்.டெக்., எம்.பிளாண்., எம்.ஆர்க். ஆகிய படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடக்கிறது.  இவ்வாறு பேராசிரியர் மல்லிகா தெரிவித்தார்.

No comments:

Post a Comment