திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் வடிவேல், செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:
மாநில கல்வி வாரிய மாணவன் மருத்துவ நுழைவு தேர்வில் பங்கேற்க முடியவில்லை. மத்திய அரசின்
பாடத்திட்டத்தில் படிப்பவரே நுழைவு தேர்வை எழுதுகின்றனர்.
இதற்காக அந்த பாடத்திட்டத்தை தமிழில் மாநில அரசுகள் பாடத்திட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் மற்றும் இதர மொழிகளிலும் நீட் தேர்வு நடத்த வேண்டும். இடஒதுக்கீடுகள் பாதிக்கப்படாத அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்தி 2 ஆண்டுகளுக்குப்பின் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment