Pages

Saturday, September 19, 2015

பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் 1.22 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்களில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 533 மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட வன அலுவலர் நிகார் ரஞ்சன் கூறினார்.


இதுகுறித்து அவர் கூறியது:

தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி வனத் துறை மூலம் தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 9 ஆயிரத்து 374 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, மதுரை மாவட்ட வனத் துறை சார்பில், மாட்டுத்தாவணி, சத்திரப்பட்டி, ஒய்.புதுப்பட்டி, உசிலம்பட்டி, காரைகேணி, சோழவந்தான், டி.ஆண்டிபட்டி, வாடிப்பட்டி ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன.

இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 786 மரக்கன்றுகள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராமப் பகுதிகளில் நடுவதற்காக ஊரக வளர்ச்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 1 லட்சத்து 22 ஆயிரத்து 533 மரக்கன்றுகள் அரசு நிலங்கள், அரசுத் துறை அலுவலக வளாகங்கள், தனியார் நிறுவனம், தொழிற்சாலை, பள்ளி, கல்லூரி, கோயில் வளாகங்கள், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நடப்படும்.

ஆகவே, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கக் கூடிய வசதிகள் உள்ள இடத்தின் உரிமையாளர்கள், அரசுத் துறையினர் மரக்கன்று குறித்த தேவைக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை அணுகலாம். இதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்து மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment