Pages

Thursday, September 24, 2015

வேலைக்கு செல்லும் பெண்கள் தான் வேலையில்லா பிரச்னைக்கு காரணமாம்

ராய்ப்பூர்: 'வேலையில்லா திண்டாட்டத்துக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தான் காரணம்' என, சத்தீஸ்கர் மாநில, பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ., கட்சி யின், ரமண் சிங் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநில கல்வி துறை வழங்கியிருக்கும், 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், வேலைக்கு செல்லும் பெண்களால்தான், வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வேலைக்கு செல்லும் பெண்களை இழிவாக சித்தரித்திருப்பதாக, சவும்யா கர்க் என்ற ஆசிரியை, மாநில பள்ளி கல்வி துறை மற்றும் மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறார். 

அவர் அளித்த புகாரில், 'இத்தகைய தகவலால், மாணவர்களிடம், பெண்கள் என்றாலே வீட்டு வேலை செய்வதற்கும், தங்களை கவனிப்பதற்கும் தான் என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்' என கூறியுள்ளார். இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

No comments:

Post a Comment