அரசு தொழில்நுட்பத் தேர்வை நடத்தாமல், கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது.கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஓவியத்தில் 10 தேர்வுகள், தையலில் 4, நடனம், இசையில் தலா 3 தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தோர் எழுதலாம்.2012 வரை டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
'ஆன்லைன்' விண்ணப்பிக்கும் முறையால் 2013 டிசம்பரில் தேர்வு நடத்தாமல், 2014 மே மாதத்தில் நடத்தப்பட்டது. இனி தொழில்நுட்பத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது.இந்த ஆண்டு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படவில்லை.அதன்பின் மூன்று மாதங்கள் கடந்தும் தேர்வை நடத்தாமல் கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது. மேலும் 2014 ல் நடந்த ஓவியத்தேர்வில் 100 மாணவர்கள் முறைகேடாக தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை.தமிழ்நாடு குழந்தைகள் ஓவிய மன்றத் தலைவர் நல்லகாசிராஜன் கூறியதாவது: கல்வித்துறை தொழில்நுட்பத் தேர்வுகளை விரைந்து நடத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிகளில் தேர்வு நடத்த அனுமதிக்க கூடாது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலர், இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment