சென்னை:குரூப் - 2 பதவிகளில், 2,269 காலிபணியிடங்களுக்கு, 2014 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்ற வர்களில், தகுதியானோரின் இறுதிப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ளது.
இதில், உதவியாளர் பணிக்கு, 1,365 பேர், அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எழுத்தர் பணிக்கு, 43 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தவிர, உதவியாளர் பணிக்கு, சான்றிதழ் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில், 43 பேருக்கு, வரும், 28ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
No comments:
Post a Comment