Pages

Thursday, September 24, 2015

தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு வழிக் கல்வி தொடர வேண்டும்: ஆந்திர அரசு

தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு வழிக் கல்வியும், தெலுங்கை இரண்டாவது மொழியாக தேர்வு செய்யும் வாய்ப்பும் தொடர வேண்டும் என்று தமிழக அரசிடம் ஆந்திர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.



 இதுதொடர்பாக ஆந்திர மாநில தகவல், கலாசார மற்றும் தெலுங்கு மொழி வளர்ச்சித் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டியின் அலுவலகம், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

 தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழக பள்ளிக் கல்வித் துறை, தமிழ் மொழித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோரை, அமைச்சர் ரகுநாத ரெட்டி சென்னையில் சந்தித்தார். அப்போது, தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு வழிக்கல்வியும், தெலுங்கை இரண்டாவது மொழியாக தேர்வு செய்யும் வாய்ப்பும் தொடர வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார். 
 ஆந்திரத்துக்கும், தமிழகத்துக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதையும், ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழிக்கல்வியை ஆந்திர அரசு ஊக்குவித்து வருவதையும், அமைச்சர் ரகுநாத ரெட்டி சுட்டிக் காட்டினார்.
 ஆந்திர அரசின் கோரிக்கை தொடர்பாக, வரும் 30ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது, அமைச்சர் ரகுநாத ரெட்டியுடன், தமிழகத்தைச் சேர்ந்த தெலுங்கு அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடன்சென்றனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு வழிக்கல்வியை நிறுத்த, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், ஆந்திர அரசு மேற்கண்ட கோரிக்கையை வைத்துள்ளது. 

No comments:

Post a Comment