ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-ல் விண்டோஸ், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அலுவலக பணியாளர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்ய அனுமதிக்கிறது ஆபிஸ்-2016. ஆபிஸ்-2016, 40 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விண்டோஸ் 7 அல்லது அதற்கு பிறகான இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் இந்த மேம்படுத்தப்பட்ட ஆபிஸ்-2016 அப்ளிகேசனை பயன்படுத்த முடியும். ஆபிஸ்-365 சந்தாதாரர்கள் ஆபிஸ் 2016-யை தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
No comments:
Post a Comment