சென்னை:பொதுச்சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் முறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் மற்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் ஆகியோர், நேற்று மாலை கூறியதாவது:அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ள பொதுச்சேவை மையங்களில்,
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் செல்வதற்கான தேதி மற்றும் நேரத்தை, பொதுச்சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.பாஸ்போர்ட் பெற இணைக்க வேண்டிய கல்விச் சான்று, பிறந்த தேதிக்கான ஆவணம், கல்விச்சான்று, புகைப்படம் ஆகியவற்றுடன் பொதுச்சேவை மையத்திற்கு சென்றால், 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க முடியும். இதற்கு, பாஸ்போர்ட் கட்டணம், 1,500 ரூபாய்; பொதுச்சேவை மைய கட்டணம், 100 ரூபாய்; வங்கிக் கட்டணம், 55 ரூபாய் என, மொத்தம், 1,655 ரூபாய் செலுத்த வேண்டும்.
கிராமங்களில் உள்ள மக்களுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை; பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் சிக்கல்; நீண்ட துாரம் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பம் அளிக்க வேண்டியுள்ளது போன்ற பிரச்னைகளுக்கு, பொதுச்சேவை மையங்கள் தீர்வாக இருக்கும்.
போலீஸ் விசாரணை: பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கான போலீஸ் விசாரணையை விரைவில் முடிக்க, பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி., அலுவலகங்கள், இணையம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பம், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பதிவானதும், போலீஸ் விசாரணைக்கான கோரிக்கை, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு செல்லும்.
அதேபோல், போலீஸ் விசாரணை அறிக்கையை, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு, 'ஆன் - லைனில்' அனுப்பும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் போலீஸ்
விசாரணைக்கான காலம் குறைக்கப்பட்டு, விரைவாக பாஸ்போர்ட் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment