வங்கி எழுத்தர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சென்னையில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கம், "எம்பவர்' சமூக நீதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
பயிற்சி வகுப்புகள் சென்னை பெரியார் திடலில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் வங்கி தேர்வாணையத்துக்கு (ஐபிபிஎஸ்) அனுப்பிய விண்ணப்பித்தின் நகலை, "பொதுச் செயலாளர், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கம், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, எண் 139, பிராட்வே, சென்னை 600108' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஹண்ர்க்ஷஸ்ரீ.ஸ்ரீர்ஹஸ்ரீட்ண்ய்ஞ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இது தொடர்பாக மேலும் தகவல் பெற 9381007998, 9445174128, 9444993844, 9176075253 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment