மதுரை, உசிலம்பட்டி மற்றும் வேலூர் கல்வி மாவட்டங்களின் புதிய மாவட்டக் கல்வி அலுவலர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றனர்.
நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பெ.சாத்தாவு மதுரை மாவட்டக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய
கூ.ராஜாமணி மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். பரவை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றிய அமுதா, மதுரை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
வலையங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜி.ரேணுகா மாவட்ட கல்வி(உசிலம்பட்டி) அலுவலராக பொறுப்பேற்றுள்ளார், திண்டுக்கல் மாவட்டம் ஏ.கலையம்புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.வனஜா மாவட்ட கல்வி(மேலூர்) அலுவலராக பொறுப்பேற்றுள்ளார்.
No comments:
Post a Comment