Pages

Tuesday, September 22, 2015

டிச.27-இல் "நெட்' தேர்வு

இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

 இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.


 நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கும் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது.
 இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். 
 வரும் டிசம்பர் மாதத்துக்கான தேர்வை டிசம்பர் 27-ஆம் தேதி நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பையும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேதியும் விரைவில் வெளியிடப்பட உள்ளது என சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment