Pages

Tuesday, September 29, 2015

மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசிகள்

சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கும் திட்டமான, "அம்மா கைப்பேசி திட்டம்' தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் திங்கள்கிழமை அவர் படித்தளித்த அறிக்கை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்து, இப்போது 6.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், 92 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. 

இந்த சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் உள்ளனர். அவர்கள் புதிய சுய உதவிக் குழுக்களை அமைக்கவும், பயிற்றுவிக்கவும் துணை புரிந்து வருகின்றனர்.

சுய உதவிக் குழுக்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு போன்ற பல்வேறு நடைமுறைகளுக்குப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது. விவரங்களைப் பதிவேடுகளில் பதிவு செய்யவும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் உருவாக்கி கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டம், "அம்மா கைப்பேசி திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.

முதல் கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு ரூ.15 கோடியில் அம்மா கைப்பேசிகள் வழங்கப்படும். 

ரூ.195 கோடியில் 4 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: கடலூர், நாகப்பட்டினம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.195.94 கோடியில் நான்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

No comments:

Post a Comment