"ஒரு வாக்காளர் இரண்டு இடங்களில் இருந்தால் வாக்காளரின் போட்டோவை அடையாளம் காட்டும் புதிய 'சாப்ட்வேரை' தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகள் நடக்கிறது.
2016 ஜனவரி முதல் நாளில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேர மனு செய்யலாம். சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் நடந்த வாக்காளர் சிறப்பு முகாம்களில், அதிகளவு புதிய வாக்காளர்களாக சேர மனு அளித்துள்ளனர்.முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்டம் வாரியாக தேர்தல் ஆணைய கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இம் மனுக்கள் மீது ஒரு வாரத்திற்கு பின், வாக்குச்சாவடி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பாகம் வாரியாக பிரித்து, வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தப்பட உள்ளது.புதிய சாப்ட்வேர் அறிமுகம்: 19 வயதுக்கு மேற்பட்ட பழைய வாக்காளர் கடந்த தேர்தலின் போது ஒரு தொகுதியில் இருந்திருப்பார். அவர் தற்போது வேறு ஒரு தொகுதியில் வாக்காளராக சேர படிவம் 6ல் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்தில் பகுதி 4ல், பழைய முகவரி விபரம் குறிப்பிட வேண்டும். பழைய முகவரியில் விண்ணப்பித்தவர் பழைய வாக்காளராக இருந்தால் தற்போது புதிதாக தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள 'சாப்ட்வேர்' அவரின் 'போட்டோ இமேஜ்ஜை' கண்டுபிடித்து தெரிவிக்கும். இந்த சாப்ட்வேர் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியால் ஒரே வாக்காளர் இரண்டு தொகுதியில் இனி வாக்காளராக இருக்க முடியாது. தமிழகத்தில் எந்த தொகுதியில் இருந்து மாறி மற்றொரு தொகுதியில் வாக்காளராக சேர விண்ணப்பித்தால் புதிய 'சாப்ட்வேரில்' போட்டோவுடன் தகவல் தெரிவித்து விடும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment