Pages

Thursday, September 24, 2015

வாக்காளர் பட்டியல் திருத்தம்: செப். 30, அக் 7-ல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள செப். 30 மற்றும் அக். 7 ஆகிய இரு தினங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற உள்ளன என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.




ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து கல்லூரி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து ஆட்சியர் மேலும் பேசியது:

1.1.2016ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவ,மாணவிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள வசதியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செப். 30 மற்றும் அக். 7 ஆகிய இரண்டு தினங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளன. கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு

தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்றார் அவர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், அரியலூர் சார் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ராஜகோபாலன், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment