சமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டம் மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,யை பின்பற்றும் பள்ளிகளைத் தவிர, மற்ற பள்ளிகள், தமிழக அரசின் சமச்சீர் கல்வியை பின்பற்றுகின்றன.இதில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையில், மூன்று பருவங்களாக பாடம் நடத்தப்படுகிறது.முதல் பருவத்துக்கு வரும், 26ம் தேதி தேர்வு முடிகிறது. அக்., 5ல், பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படும்.
இதற்காக அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வினியோகம் நடந்து வருகிறது.தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால் மற்றும் சேவைகள் கழகம், 'ஆன் - லைன்' முறையில் பதிவு செய்து பாடப் புத்தகங்களை அனுப்புகிறது.ஆனால், 35 சதவீத பள்ளிகள் புத்தகங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.'புத்தகங்களை வாங்க வேண்டும். தாமதமானால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி நிர்வாகங்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment