இந்திய அஞ்சல் துறை சார்பில், தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலுள்ள, அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பு கோட்டங்களிலுள்ள, 142 தபால்காரர் மற்றும் ஒரு மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொது பிரிவினருக்கான வயது வரம்பு, 18 - 27; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கு, அரசு ஆணைகளின்படி, வயது தளர்வு வழங்கப்படும்.
இரு பணிகளுக்கும் கல்வித்தகுதி, 10ம் வகுப்பு; 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்.சம்பள விகிதம், 5,200 - 20,200 ரூபாய். தொடர்பு கொள்ள, http://www.dopchennai.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். விண்ணப்பிக்க, அக்., 4ம் தேதி கடைசி நாள்.தனியார் விளம்பரம் வாடகை வீடு, குடியிருப்பு, கார் விற்பனை போன்ற வர்த்தக ரீதியான விளம்பரங்களை, இனி, தபால் நிலையங்களிலும், தனியார் நிறுவனங்கள் செய்யலாம். 'ஏ 4' பேப்பர் சைஸ் அளவிலான விளம்பரத்தை, இரண்டு வாரங்களுக்கு, தபால் நிலையத்தில் விளம்பரப்படுத்த, 1,000 ரூபாய் கட்டணம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment