பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக வாட்ஸ்-அப்களுக்கு மத்திய அரசு கொண்டு வர இருந்த புதிய கெடுபிடிகளுக்கான வரைவு தேசிய கொள்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற நடைமுறையை செயல்படுத்த மத்திய அரசு புதிய வரைவு கொள்கையை கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அடுத்த மாதம் 16ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தற்போது வாட்ஸப் மற்றும் சமூக வலைதளங்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்களை பாதுகாப்பு கருதி 90 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு சேமிக்காமல் டேட்டாக்களை அழித்துவிட்டால் அது சட்டவிரோதம் என அறிவிக்க வகை செய்யும் புதிய தேசிய வரைவு கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதுபோல், சேவையை வழங்கும் நிறுவனங்களும் இந்தியாவிலேயே பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்துவதும் கட்டாயம். இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு அதிகாரியாக விஞ்ஞானி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு akrishnan@deity.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இந்த புதிய கொள்கையினால் மக்களுடைய அந்தரங்கத்தில் நுழைய முயற்சிக்கின்றது மத்திய அரசு என்ற சர்ச்சை எழுந்ததுடன், மக்கள் மத்தியில் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.
இதனால் வாட்ஸப் மற்றும் சமூக வலைதளங்களுக்கு கொண்டுவர இருந்த புதிய வரைவு கொள்கையை மத்திய அரசு கைவிட்டது
No comments:
Post a Comment