சத்துணவு ஊழியர்கள் மீது, தடியடி நடத்தவில்லை' என, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி கூறினார். இதுதொடர்பாக, சட்டசபையில் அமைச்சர் வளர்மதி கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாக வந்த சத்துணவு அமைப்பாளர்கள், முதல்வரை சந்திக்க வேண்டும் என்றனர்.
அவர்களை, சமூகநலத் துறை செயலர் சந்தித்துப் பேசினார். அதன்பின், அமைச்சரை சந்திக்க வேண்டும் என்றதால், என் வீட்டுக்கு, இரவு 10:45 மணிக்கு வந்தனர். அவர்களது கோரிக்கைகளை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினேன். இதையடுத்து, அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். அவர்கள் மீது, தடியடி எதுவும் நடத்தவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment