Pages

Wednesday, September 30, 2015

சென்னைப் பல்கலைக்கழகத்தில் அக்.3-இல் வேலைவாய்ப்பு முகாம்

இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: 2013, 2014, 2015 ஆகிய மூன்று ஆண்டுகளில் இளநிலை கலை, அறிவியல் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விருப்பமுள்ள மாணவர்கள் பெயர்களைப் பதிவு செய்வது அவசியம்.

பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 1,200 மாணவர்களை பணிக்காகத் தேர்வு செய்ய உள்ளன. முகாம் மூலம் அளிக்கப்படும் பணிகள் அனைத்தும் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மாத ஊதியம் கிடைக்கக் கூடிய பகல் நேரப் பணிகளாகவே இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு 95516 90630, 95516 90631 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment