Pages

Tuesday, September 22, 2015

பி.எட்., 'கட் - ஆப்' அறியஇணையதளத்தில் புதுவசதி

பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.
மொத்தமுள்ள, 1,750 இடங்களுக்கு, 7,440 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இவர்களில், 1,130 பேர் பி.இ., - பி.டெக்., பட்டதாரிகள். பி.எட்., படிக்க விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான, 'கட் - ஆப்' விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரும், 28 முதல் அக்டோபர், 5ம் தேதி வரை நடக்கும், கலந்தாய்வு விவரங்களும், கல்லுாரி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. 
இந்த ஆண்டு முதன்முறையாக, http://www.ladywillingdoniase.com என்ற இணைய தளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட, 'கட் - ஆப்' விவரங்களை பார்க்கும் வகையில், தனியாக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. http://61.8.146.180/ladywillingdon/default.Aspx என்ற இணைப்பில், விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்தால், மதிப்பெண்ணை காணலாம்.

No comments:

Post a Comment