பொது சுகாதார சார்நிலைப் பணியில் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 25-இல் நடைபெறுகிறது. இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் புள்ளியியல் உதவியாளர் (Statistical Assistant) பதவியில் காலியாகவுள்ள 12 இடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வான விண்ணப்பதாரர்களில், 12 பேருக்கு இரண்டாம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.
அழைப்புக் கடிதம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment