10-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுவோர் அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத்தேர்வுகள் கடலூர் மண்டல துணை இயக்குநர் இரா.வீரக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறுகிறது.
இத்தேர்வெழுத அரசுத்தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இதற்காக, ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதியினை பதிவு செய்து அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதி சீட்டை இன்று (செப்.19) முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment