Pages

Monday, September 21, 2015

TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு நவீனமயம்

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், அளித்த பேட்டி: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, குறிப்பிட்ட அளவு தேர்வு கட்டண சலுகை உள்ளது. பட்டியலினத்தவருக்கு முழுவதும் சலுகை உள்ளது.

இந்தசலுகை தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடும் விவரங்களில், சில நேரங்களில் தவறுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.மேலும், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தேர்வர்கள் ஒருமுறை பதிவில் (ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்) அளித்துள்ள கல்வித் தகுதி விவரங்கள், தேர்வு முடிவின் போது, சான்றிதழ் சரிபார்ப்பில் மாறுதலாக உள்ளது.

இதைத் தடுக்க, 'டேஷ் போர்ட்' என்ற புதிய முறை விரைவில் அறிமுகமாகும். டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் சுயவிவரப் பக்கம் உருவாக்கப்படும். தேர்வர்கள் தங்களின் பெயர், கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை, 'அப்டேட்' செய்யலாம். இந்தத் தகவல் அடிப்படையில், தேர்வர்களின் கட்டண சலுகை குளறுபடியின்றி கணக்கிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment