சென்னை:காந்தி பிறந்த நாளில், காந்தி சிலை முதல் காந்தி மண்டபம் வரை, ஏழு கிலோ மீட்டருக்கு, சைக்கிள் ஓட்டி வர, ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.காந்தி பிறந்த நாளான அக்., 2ம் தேதி, ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், காந்தி மண்டபத்தில், கலைநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
மெரீனா கடற்கரையிலுள்ள காந்தி சிலையிலிருந்து, கிண்டி காந்தி மண்டபம் வரை, 200 மாணவர்கள் மற்றும் பிரம்மகுமாரிகள் சங்கத்தினர், சைக்கிள் பேரணி நடத்த உள்ளனர்.
இந்த சைக்கிள் பேரணியில், சென்னையின் நான்கு கல்வி மாவட்ட அதிகாரிகள், உடற்கல்வி ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment