Pages

Saturday, September 19, 2015

செப்டம்பர் 26-இல் எம்.பி.பி.எஸ். 3-ஆம் கட்டக் கலந்தாய்வு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப மூன்றாம் கட்டக் கலந்தாய்வு வரும் செப்டம்பர் 26 முதல் இரண்டு நாள்கள் நடைபெற உள்ளன.
 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இரண்டு கட்டக் கலந்தாய்வு நடைபெற்று வகுப்புகளும் தொடங்கப்பட்டு விட்டன.
எனினும், இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டு உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக ஏற்படுத்தப்பட உள்ள 27 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்படும் எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியிலிருந்து தமிழக ஒதுக்கீட்டுக்குச் சமர்ப்பிக்கப்படும் 65 எம்.பி.பி.எஸ். இடங்கள், பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப வரும் 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment