தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றும், 1,600 கவுரவ பேராசிரியர்களுக்கு, நான்கு மாதமாக மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்.
தமிழக கல்லுாரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில், பல பல்கலைகளின் இணைப்பில், 83 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், பேராசிரியர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
எனவே, தற்காலிக ஏற்பாடாக, அனைத்து கல்லுாரிகளிலும், 1,600 கவுரவ பேராசிரியர் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில், மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால், நான்கு மாதங்களாக, கவுரவ பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. 'அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு ஆணை வரவில்லை' என, அதிகாரிகள் கூறுகின்றனர் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கல்லுாரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் சிவராமன் கூறும்போது, 'கவுரவ பேராசிரி யர்களுக்கு, மாதம் தோறும், 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என, பல மாதங்களாக கோரிக்கை விடுக்கிறோம். தற்போது, 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கூட ஒழுங்காக கிடைக்காததால், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு
உள்ளன,'' என்றார்.கவுரவ பேராசிரியர்களில் பலர், தங்க நகைகளை அடகு வைத்து, குடும்பம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment