ஜூலை 31-ந்தேதி வரைவருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்
2016-17 வரிவிதிப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் கம்ப்யூட்டர் மூலமாக தாக்கல் செய்வது நேற்று தொடங்கியது
கம்ப்யூட்டரில் மத்திய வருமான வரி துறையின் இணையதளத்தில் ஐ.டி.ஆர்.1 (சஹாஜ்) என்ற படிவத்தை பயன்படுத்தி மாதச்சம்பளம் பெறும் தனிநபர்கள், வட்டி வருமானம் பெறுகிறவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.
இதேபோன்று வணிகத்தின் மூலம் வருமானம் பெறுகிற தனி நபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் கம்ப்யூட்டரில் வருமான வரித்துறையின் இணையதளத்தில் ஐ.டி.ஆர். 4 எஸ் (சுகம்) என்ற படிவத்தை பயன்படுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
மற்ற பிரிவினருக்கான படிவங்கள் விரைவில் வருமான வரி துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும்.
வருமான வரி செலுத்துகிறவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறவர்களின் வசதிக்காக வருமான வரித்துறை இணையதளத்தில் வரி கணக்கீட்டு கால்குலேட்டர் இணைக்கப்பட்டுள்ளது. படிவங்களை சரியாக நிரப்பி தாக்கல் செய்வதற்கு இந்த கால்குலேட்டர் உதவிகரமாக இருக்கும்.
ஜூலை 31-ந்தேதி வரையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்திருப்பது நினைவுகூரத்தகுந்தது
No comments:
Post a Comment